தமிழ்நாட்டில் நம் ஆட்சி தான் உலகமே இதுவரை கண்டிராத பொற்காலமாக இருக்கும். இது வெறும் வாய் பேச்சல்ல.
நான் இங்கு கூறியுள்ள 27 முத்துக்கு முத்தான வாக்குறுதிகளும் அதாவது மாபெரும் சாதனைகளும், நம் Dr. KELIR என்னும் YouTube சேனலில் பதிவேற்றம் செய்ய இருக்கும் இன்னும் பல வாக்குறுதிகளும், மேலும் நம் ஆட்சியில் நாம் சாதிக்க உள்ள நாட்டுக்கு நன்மை பயக்கும் அதிகப்படியான சிறந்த திட்டங்களும், நான் 1976-ஆம் ஆண்டு BE
முதலாம் ஆண்டு படிக்கும் போது என் கல்லூரி நண்பர்கள் சிலர் “இந்தியர்களை விட அமெரிக்கர்கள் அதிக புத்திசாலிகள்” என கூறியதற்கு நான் “இந்தியர்கள் புத்தியில் பிற எந்த நாட்டினருக்கும் சளைத்தவர்கள் இல்லை,” என வாதம் செய்ததுடன் அதை நிரூபிக்க, “இந்தியாவை உலகின் தலைசிறந்த செழிப்பான அனைத்து மக்களும் மிகவும் சந்தோசமாக வாழும் வல்லரசாக ஒளிரவைத்து காட்டுவேன்” என அவர்கள் முன்னிலையில் சபதம் எடுத்ததை நிறைவேற்றுவதற்காக அப்போதிலிருந்தே 49 ஆண்டுகளாக சளைக்காமல் அயராது ஆழ்ந்து சிந்தித்து ஆராய்ச்சி செய்து, அதன் மூலம் VISUALIZE பண்ணி அத்துடன் நம் நாட்டிலுள்ள இயற்கை வளங்களையும், மனித வளத்தையும் கணக்கெடுத்து அந்த வளங்களை விஞ்ஞானம், புள்ளியியல், நிதி மேலாண்மை, பொது நிர்வாகம் மற்றும் பல MANAGEMENT நுட்பங்களையும் (உதாரணம்: OPERATIONS RESEARCH-ம் அதற்குட்பட்ட PERT & CPM) உபயோகித்து துல்லியமாக கணித்து, நம் தமிழ்நாட்டை உலகிலேயே மிகச் சிறந்த செழிப்பான அனைவரும் மகிழ்ச்சியாக வாழும் மாநிலமாக ஒளிரவைக்க கால வரையறைகளுடன் கூடிய மிகத் துல்லியமான செயல்திட்டத்தை உருவாக்கி உள்ளதால் தான் இங்கு குறிப்பிட்டுள்ள கால வரம்புகளுக்குள் நான் கூறும் அனைத்து மாபெரும் சாதனைகளையும் அதாவது வாக்குறுதிகளையும் நிச்சயமாக சாதிக்க முடியும் என நான் ஆணித்தரமாக கூறுகின்றேன்.
மேலும் கீழே கூறப்படும் ஒவ்வொரு வாக்குறுதியையும் விவரமாக இங்கு கூறினால் அதிக நேரம் தேவைப்படும் என்பதால் சிலவற்றை மேலும் விவரமாக வீடியோக்களாக நம் Dr. KELIR என்னும் YouTube Channel-லிலும், கட்டுரைகளாக நம் இணையதளத்திலும் வெளியிட உள்ளோம். ஆகவே ஒவ்வொரு வாக்குறுதியின் மேலும் அதிக விவரங்களை அவைகள் மூலமாக தெரிந்து கொள்ளும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன். நம் நாட்டில் நல்லாட்சி அமைய இச்சிறிய தியாகத்தைச் செய்யும் படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன்.
தமிழ்நாடு அரசால் சேவை நோக்கில் தற்போது நடத்தப்படும் அனைத்து தொழில்களும், சேவைகளும், இலவசங்களும், இனாம்களும் நம் ஆட்சியில் தற்போது இருப்பதை விட மிகவும் சிறப்பாக தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும். நம் ஆட்சியில் தொழிற்சாலைகள் உட்பட அனைத்தும் காற்று மாசு, நீர் மாசு மற்றும் சுற்றுசூழல் கெடுதல், சுகாதாரக் கேடுகள் போன்றவை அறவே இல்லாததாக இருக்கும். என் அனைத்து வாக்குறுதிகளையும் அவைகளில் குறிப்பிட்டுள்ள காலவரம்புகளுக்குள் நிச்சயமாக நிறைவேற்றுவேன் என நான் என் மனசாட்சியுடன் உறுதியளிக்கின்றேன்.
நான் கூறியுள்ள அனைத்து சாதனைகளை, அதாவது வாக்குறுதிகளை, சாதிக்கும் வழிமுறைகள் என்னிடம் மிகத் தெளிவாக உள்ளன. இவ்வாக்குறுதிகள் பிற அரசியல் கட்சிகள் கொடுக்கும் வாக்குறுதிகளைப் போல ஏமாற்று வாக்குறுதிகள் அல்ல. என்னை நிச்சயமாக நம்பலாம். இந்த மாபெரும் சாதனைகளை எப்படி சாதிக்க முடியும் என்பதை சாதாரண குடிமக்களுக்கும் எளிதில் புரியும்படி, மிகவும் விரிவாக எளிமையான நடையில் வீடியோவாக பதிவு செய்து அந்த வீடியோவை பிற பெரிய அரசியல் கட்சிகள் இந்த ஆண்டில் தமிழ்நாட்டில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கு முன் அவர்களது தேர்தல் அறிக்கைகளை வெளியிட்ட உடனேயே நம் Dr. KELIR என்னும் யூடியூப் சேனலிலும், நம் இணையதளத்திலும் நாம் வெளியிட உள்ளோம். ஏனெனில் பிற பெரிய அரசியல் கட்சிகள் அவர்களுடைய தேர்தல் அறிக்கைகளை வெளியிடுவதற்கு முன் நாம் நமது சாதனைகளை எப்படி சாதிக்க முடியும் என்னும் விவரங்களை வெளியிட்டால், அந்த அரசியல் கட்சிகள் நாம் சாதிக்க உள்ள நான் கண்டுபிடித்த சாதனைகளைக் களவாடி அச்சாதனைகளைச் சாதிக்கும் வழிமுறைகளை அவர்கள் கண்டுபிடித்ததாக பொய் சொல்லி பொது மக்களை ஏமாற்றி நம் கட்சிக்கு கிடைக்க வேண்டிய ஓட்டுக்களை அவர்கள் பெற்றுவிட்டு அதன் பின் அச்சாதனைகளை செயல்படுத்த மாட்டார்கள். பேப்பரில் எழுதி கணக்கு போடாதிருந்தாலும் கூட தெரிந்தோ தெரியாமலோ மனதிற்குள் ஒரு risk-ஐ எடுத்து தான், நம் நன்மைகளுக்காக நாம் மின்சாரத்தை உபயோகிப்பதைப் போல, என் கையில் ஆட்சியைத் தருவதற்கு, நான் நாட்டிற்கு செய்யவுள்ள நன்மைகளைக் கருதி, ஒரு மிகச் சிறிய Calculated Risk-ஐ எடுப்பது தான் நம் அனைவரின் நன்மைகளுக்கும், முன்னேற்றத்திற்கும் மிகச்சிறந்தது. நம் ஆட்சி அமைந்த 12-வது மாத இறுதியிலும், அதன் பின் ஒவ்வொரு ஆறு மாத இறுதியிலும், நம் ஆட்சி தொடரலாமா அல்லது கலைக்கப்பட வேண்டுமா என ஒரு பொது வாக்கெடுப்பு நிச்சயமாக நடத்தப்பட இருப்பதாலும் இந்த வாக்கெடுப்பில் பெரும்பான்மை வாக்குகள் நம் ஆட்சி கலைக்கப்பட வேண்டுமென இருந்தால், உடனடியாக நமது ஆட்சியை நாமே நிச்சயமாக கலைத்து விடுவோம் என்பதாலும் என் கையில் தமிழகத்தை ஆளும் வாய்ப்பு தருவதால் குடிமக்கள் எடுக்கும் risk மிக மிகச் சிறியது தான்.
எனக்கு அரசியலைப் பற்றியும், எப்படி ஆட்சி செய்தால் நாட்டை மிகவும் செழிப்பாகவும் மற்றும் அனைத்து குடிமக்களை மிகவும் சந்தோஷமாக வாழவைக்கவும் முடியும் என்பது தற்போது இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல்வாதிகளைவயும் விட நன்றாக தெரியும், ஏனென்றால் நான் நம் நாட்டை முன்னேற்ற 49 வருடங்களாக சளைக்காமல் அயராது ஆழ்ந்து சிந்தித்து ஆராய்ச்சி செய்தது மட்டுமல்லாமல் அதன் பலனாக (I) விஞ்ஞான ஆட்சி (SCIENTIFIC GOVERNANCE) என்னும் தலைப்பில் விஞ்ஞான முறைப்படி நாட்டை எப்படி சிறப்பாக ஆழ வேண்டும் என்னும் ஒரு உலகின் மிகச் சிறந்த புத்தகத்தையும், (II) விஞ்ஞான நீதிபரிபாலினம் (SCIENTIFIC JUDICIARY) என்னும் உலகின் நீதித்துறையையே மாற்றவிருக்கும் இன்னொரு புத்தகத்தையும், (iii) சமுதாய அந்தஸ்து மதிப்பெண் (SOCIAL STATUS SCORE) என்னும் உலகில் நல்லாட்சிக்கு வழிவகுக்கும் மிகச்சிறந்த கருவியான கருத்தை அறிமுகப்படுத்தும் இன்னொரு புத்தகத்தையும் மற்றும் (iv) ஸ்மார்ட் அரசு ஊழியர்கள் (SMART GOVERNMENT EMPLOYEES) என்னும் நல்லாட்சிக்கு மிகவும் இன்றியமையாத ஒரு புதுவகையான திட்டத்தைப் பற்றிய புத்தகத்தையும், அதாவது நான்கு வைரங்களைப் படைத்துள்ளேன். இப்புத்தகங்களை இவ்வருடம் நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு முன் பிற அரசியல் கட்சிகள் வெளியிடும் தேர்தல் அறிக்கைகளுக்கு முன் நான் வெளியிட்டால் பிற அரசியல் கட்சிகள் நாம் சாதிக்க உள்ள நான் கண்டுபிடித்த சாதனைகளை என் மேற்கண்ட புத்தகங்களிலிருந்து திருடி அச்சாதனைகளைச் சாதிக்கும் வழிமுறைகளை அவர்கள் கண்டுபிடித்ததாக அவர்களின் தேர்தல் வாக்குறுதிகளில் சேர்த்து பொது மக்களை ஏமாற்றி நம் கட்சிக்கு கிடைக்க வேண்டிய ஓட்டுக்களை அவர்கள் பெற்றுவிட்டு அதன் பின் அச்சாதனைகளை செயல்படுத்த மாட்டார்கள். எனவே பிற பெரிய அரசியல் கட்சிகள் இவ்வருடம் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு முன் அவர்களது தேர்தல் அறிக்கைகளை வெளியிட்ட உடனேயே மேற்கண்ட நான்கு புத்தகங்களையும் நான் வெளியிட உள்ளேன்.
ஆகவே என் மனசாட்சியுடன் நான் ஆணித்தரமாக சொல்கிறேன் தற்போது உள்ள அரசியல்வாதிகளில் நான் மட்டும் தான் நம் தமிழ்நாட்டை முன்னேற்ற சிறந்தவன். இது சத்தியம். தற்போது உள்ள சூழலில் நாமும் நம் சந்ததியினர்களும் நான் கூறிய அனைத்து நம்ப முடியாத மிக அரிய, எல்லா நன்மைகளும், எல்லா வசதி வாய்ப்புகளும் பெற்று உலகின் மிகவும் சந்தோசமானவர்களாக வாழ நம் கட்சி தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பதே தான் ஒரே வழி. இந்த புத்தகத்தை முழுமையாக, நன்றாக படித்து, நன்றாக சிந்தித்து உங்கள் மனசாட்சிப்படி செயல்பட்டால் மட்டும்தான் தமிழ்நாட்டை காப்பாற்றவே முடியும். மனசாட்சிப்படி செயல்பட்டால் அதற்கு வெகுமதியாக (Bonus) நம் தமிழ்நாடு நான்கு வருடங்களுக்குள் உலகின் மிகவும் செழிப்பான சிறந்த மாநிலமாக மாறி அனைவரும் எல்லா நன்மைகளையும் பெற்று உலகின் மிகவும் சந்தோஷமானவர்களாக வாழ்வார்கள். இது சத்தியத்திலும் சத்தியம். என்னை நம்பலாம். நான் 49 வருடங்களாக சளைக்காமல் அயராது ஆழ்ந்து சிந்தித்து அதில் நான் கண்டுபிடித்தவைகளை நடைமுறை படுத்தி நம் நாட்டை முன்னேற்றுவதற்காக என் உடல், பொருள், ஆவி அனைத்தையும் முழுமையாக அர்ப்பணிக்கின்றேன்.
உங்கள் மூளை அல்லது உங்கள் மனசாட்சி உங்களுக்கு பொய் சொல்லாது. ஆகவே உங்களின் நலன்களுக்காகவும், உங்கள் சந்ததியினரின் நலன்களுக்காகவும், நம் நாட்டின் நலன்களுக்காகவும் உங்களது மூளை அல்லது உங்களது மனசாட்சி என்ன சொல்கிறதோ அதன்படி தைரியமாக செயல்படுங்கள். பெரிய கட்சிகளுடன் என்னால் (Dr. கேளிரால்) போட்டிப் போட்டு ஜெயிக்க முடியாது என எண்ண வேண்டாம். பெருவெள்ளமும் சிறு மழைத் துளிகளால் தான் உருவாகின்றது. நன்றாக சிந்தியுங்கள். சிந்தித்து செயல்படுங்கள். உங்களது வருங்காலமும், உங்களது சந்ததிகளின் வருங்காலமும், நம் நாட்டின் வருங்காலமும் உங்களது சிந்தனையிலும், உங்களது மனசாட்சி படியிலான செயல்பாட்டிலும் தான் இருக்கிறது. இந்த வருடத்தில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் நம் கட்சியைத் தவிர வேறு எந்த கட்சியாவது தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்தால் தாங்கள் கொள்ளையடிப்பதை நீதிமன்றங்களில் நிரூபிக்க முடியாதபடி விஞ்ஞான முறையில் கொள்ளையடித்து தமிழ்நாட்டை கெடுத்து விடுவார்கள் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம் தமிழ்நாட்டை 1969-க்கு பின் ஆண்ட இரண்டு கட்சிகளின் தலைவர்களில் திரு. MGR-ஐயும், செல்வி. ஜெயலலிதாவையும் தவிர மீதி அனைவருக்கும் அவர்கள் அரசியலுக்கு வரும் முன் அவர்களுக்கு இருந்த சொத்தின் மதிப்பையும், தற்போது அவர்களுக்கு இருக்கும் சொத்தின் மதிப்பையும், ஒப்பிட்டு பார்த்தால் உங்களுக்கு நன்றாக புரியும். தயவுசெய்து உங்கள், உங்களது சந்ததியினர்கள் மற்றும் தமிழ்நாட்டின் வருங்காலம் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக சிந்தித்து செயல்படும்படி மீண்டும் மீண்டும் மிகவும் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றேன்.
நம் நாட்டை உலகின் தலைசிறந்த செழிப்பான வல்லரசாக உயர்த்துவதற்காக நான் 49 வருடங்களாக சளைக்காமல் அயராது ஆழ்ந்து சிந்தித்து அதன் மூலம் மலர்ந்த சித்தாந்தங்கள், கோட்பாடுகள் மற்றும் கொள்கைகளின் அடிபடையிலான நம் ஆட்சியில் நாம் சாதிக்கவுள்ள சாதனைகளைக் கூறினால், நிர்வாணமாக அனைத்து மக்களும் வாழும் நாட்டில் உடை உடுத்திக் கொண்டு ஒருவர் சென்றால், அவரை பைத்தியக்காரன் என்று மக்கள் கேலிக்கூத்து பண்ணுவதைப் போல, லஞ்சமும் கொள்ளையும் அராஜகமும் உச்சத்தில் உள்ள தற்போதைய சாக்கடை அரசியல் கட்சிகள் என்னை ஒரு ஏமாற்றுக்காரன் எனக் கூறி என்னை கேலிக்கூத்து பண்ணுவதுடன் கொலையும் செய்ய துணிவார்கள் என எனக்கு நன்றாக தெரியும். இருந்தாலும் சிறந்த இயற்கை வளங்களையும், மிகச்சிறந்த மனித வளத்தையும் தேவைகளுக்கு அதிகமாக கொண்டுள்ள நம் தமிழ்நாட்டை திருட்டு கட்சிகள் கொள்ளையடிப்பதில் இருந்து காப்பாற்றி, இந்த கொடியவர்களால் எனக்கு வரவிருக்கும் அனைத்து ஆபத்துக்களையும் நிச்சயமாக வென்று, உலகே வியக்கும் அளவிற்கு உலகிலேயே தலை சிறந்ததாக நம் தமிழ்நாட்டை உயர்த்துவதற்காக தான் நான் என்னை நம் குடிமக்களுக்கு முழுமையாக அர்பணித்து நம் கட்சியை இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளேன்.
நாங்கள் உங்களுக்கு கொடுக்கின்ற எந்த வாக்குறுதியையாவது, அந்த வாக்குறுதியில் குறிப்பிட்டுள்ள காலவரம்புக்குள் நம் ஆட்சியில் நிறைவேற்ற தவறினால், அவ்வாக்குறுதியில் குறிப்பிட்டுள்ள காலவரம்பு முடிந்த மறுநாளே நம் ஆட்சியை நாமாகவே கலைத்து விடுவோம். மேலும், நாங்கள் நடைமுறையில் செயல்படுத்த முடியாத வாக்குறுதிகளை அளித்து, பொதுமக்களை ஏமாற்றி ஓட்டுக்களைப் பெற்று ஆட்சி அமைத்ததற்காக, நீங்கள் கொடுக்கும் அனைத்து தண்டனைகளையும் - நான்கு ரோடுகள் சந்திப்பில் டிவி கேமராக்கள் மற்றும் மக்கள் சூழ என்னை காறித்துப்புவதும், செருப்பால் அடிப்பதும் உட்பட எவ்வளவு அசிங்கமான மற்றும் கொடூரமான தண்டனைகளாக இருந்தாலும் சரி – நிச்சயமாக அவைகள் அனைத்தையும் ஏற்றுக்கொள்வேன் என இதன் மூலம் நான் என் மனசாட்சியுடன் வாக்குறுதி அளிக்கின்றேன். என்னை உங்களின் நல்ல சகோதரனாக ஏற்றுக்கொண்டு என்னை நம்புங்கள். நான் என்னால் சாதிக்க முடியாதவைகளை சாதிப்பேன் எனச் சொல்லி யாரையும் ஏமாற்றுபவன் அல்ல. இது சத்தியத்திலும் சத்தியம்.
நான் ஏற்கனவே கூறிய வாக்குறுதிகளையும் வேறு சிலவற்றையும் (அதாவது நம் ஆட்சியில் நிச்சயமாக நிறைவேற உள்ள மாபெரும் சாதனைகளை) நமது Dr. KELIR என்னும் யூடியூப் சேனலிலும், நமது இணையதளத்திலும் சற்று விவரமாக வெளியிட உள்ளேன். நம் வெப்சைட் வழியாக நம் கட்சி உறுப்பினராக சேர்வதுடன் நம் கட்சி பணிகளிலும் பங்கெடுத்து நம் கட்சி ஆட்சி அமைக்க உதவி தமிழ்நாட்டை உலகிலேயே சிறந்த மாநிலமாக மாற்றி நாம் அனைவரும் சந்தோஷமாக வாழும்படி உங்களை மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன்.
நம் தமிழ்நாட்டை உலகின் மிகவும் செழிப்பான அனைவரும் சந்தோசமாக வாழும் உலகின் தலைசிறந்த மாநிலமாக ஒளிர வைப்பதற்காகவே நம் தமிழ்நாட்டு மக்களின் செல்வாக்கைப் பெற, என்னை பற்றி நான் சொல்ல வேண்டியவைகளை தேவையான இடங்களில் சொல்லாமல் இருப்பதும் தவறு என்பதற்காக மட்டுமே தான் நான் இங்கு கீழ்கண்டவைகளை சொல்லுகின்றேனே தவிர சுய விளம்பரத்துக்காக அல்ல. ஏல்லாவற்றையும் கூற நேரமில்லாத காரணத்தால் நான் கீழ்கண்ட மிக சிலவற்றை மட்டுமே இங்கு கூறுகின்றேன். நான் BE, MBA மற்றும் MANAGEMENT-ல் PhD-யும் முடித்துள்ளேன். நான் நம் நாட்டை உலகின் தலைசிறந்த வல்லரசாக மாற்றும் முன் இந்திய மண்ணைத் தாண்டி எந்த வெளிநாட்டுக்கும் சுற்றுலா கூட செல்லமாட்டேன் என BE படிக்கும் போதே நம் நாட்டுப்பற்று காரணமாக சபதம் எடுத்ததனால் எனக்கு வெளிநாடுகளுக்கு செல்ல பல நிர்பந்தங்கள் வந்தும் இந்திய மண்ணைத் தாண்டி இன்று வரை எந்த வெளிநாட்டிற்கும் சுற்றுலா கூட சென்றதில்லை. சாதி, மத பேதங்களால் நம் நாட்டில் மக்களின் ஒற்றுமைக்கு குந்தகம் ஏற்படுவதால் நம் நாட்டில் சாதி, மதம் ஒழிய வேண்டுமென கொள்கை அளவில் மட்டுமல்லாமல் செயலிலும் நடைமுறை படுத்துபவன் தான் நான். அதனால் தான் நிறைய வருடங்களாக நான் சாதி, மதம் அற்றவனாக இருப்பதுடன் பல வருடங்களுக்கு முன்பே, என் பெயரை “ஜோசப் பென்சிகர்” என்பதிலிருந்து “யாவரும் கேளிர்” என Gazette Publication மூலமாக பெயர் மாற்றம் செய்தது மட்டுமல்லாமல் நான் “சாதி மற்றும் மதம் அற்றவர்” என தமிழ்நாடு அரசின் சான்றிதழும் பெற்றேன். இத்துடன் மட்டும் நிற்காமல் நான் சாதி, மதம் அற்ற இந்தியா உருவாக வேண்டும் என்னும் என் கொள்கையை உறுதியுடன் கடைபிடித்து பல கஷ்டங்களும், தடைகளும் வந்தும் என் மகளை வேறு சாதி, வேறு மதத்தில் திருமணம் செய்து கொடுத்த வாழ்க்கையிலும் கொள்கையைக் கடைபிடிக்கும் கொள்கைவாதி. நான் இறந்த பிறகும் நான் மனித குலத்திற்கு உதவ வேண்டும் என்பதற்காகவே, நான் இறந்த பிறகு என் அனைத்து உடல் உறுப்புகளை வேறு மனிதர்களுக்கு உபயோகப்படுவதற்காக Transplant Authority of Tamilnadu-க்கு பல வருடங்களுக்கு முன்பே என் அனைத்து உறுப்புகளையும் தானம் செய்தது மட்டுமல்லாமல், என் பூத உடலையும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் அறுத்து படிப்பதற்காக சென்னை மருத்துவக் கல்லூரிக்கும் தானம் செய்து விட்டேன்.
இத்துடன் விளம்பரம் இல்லாமலும் நான் யாரிடமும் எந்த நன்கொடையும் வாங்காமலும், என் சொந்த பணத்தில் ‘பென்சிகர் பவுண்டேஷன்’ என்னும் ஒரு பொதுத்தொண்டு அறக்கட்டளையையும் நடத்தி சமுதாயத்திற்கு நிறைய சேவைகள் மற்றும் நன்மைகள் செய்தது மட்டுமல்லாமல், 144 வருடங்கள் பாரம்பரியமிக்க அமெரிக்காவின் University of Connecticuit என்னும் பொது ஆராய்ச்சிப் பல்கலைகழகமும் என் மேற்கண்ட அறக்கட்டளையும் சேர்ந்து கூட்டு ஆராய்ச்சியும் செய்தோம். இந்த ஆராய்ச்சிக்கான முழுசெலவையும் அந்த University தர விரும்பிய போதும் நான் அதை வாங்காமல், என் சொந்த பணத்தையே செலவு செய்தேன். என் அறக்கட்டளைக்கு நான் இன்று வரை வெளிநாட்டில் இருந்து பணம் வாங்குவதற்காக தேவைப்படும் FCRA-க்கு விண்ணப்பம் கூட செய்ததில்லை. என்னுடன் அமெரிக்காவின் மூன்று பேராசிரியர்களும் இணைந்து செய்யப்பட்ட இந்த ஆராய்ச்சியில் நான் தான் முதன்மை ஆராய்ச்சியாளர். இந்த ஆராய்ச்சி நம் நாட்டு மக்களின் நன்மைக்காக நடத்தப்பட்டது. இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் மிகவும் பலனுள்ளதாக இருந்ததால், இதன் பல ஆராய்ச்சி கட்டுரைகள் பல உலக முன்னிலை அதிக Impact Factor உடைய ஆய்விதழ்களில் என் பெயருடன் அந்த ஆராய்ச்சியில் பங்கெடுத்த மூன்று அமெரிக்க பேராசிரியர்களின் பெயரும் சேர்ந்து பிரசுரமாகி இருந்தது. நான் PhD பண்ணும் போதும் என் PhD சம்பந்தபட்ட பல ஆராய்ச்சிக் கட்டுரைகள் பல சிறந்த ஆய்விதழ்களிலும் பிரசுரம் ஆகியுள்ளது. நான் ஒரு வாரப் பத்திரிக்கையையும், ஒரு மாதப் பத்திரிக்கையையும் நடத்தினேன். இதைத் தவிர பல புத்தகங்களையும் எழுதியுள்ளேன். நான் மிகவும் நேர்மையானவன். இதற்கு ஒரு உதாரணம் நான் 2025-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதி ரூ. 1,96,32,950/-ஐ வருமான வரியாக கட்டியுள்ளேன். உலகை பற்றியும் நம் இந்திய நாட்டை பற்றியும் நம் தமிழ்நாட்டை பற்றியும் தற்போது இருக்கும் அனைத்து அரசியல்வாதிகளைவிடவும் எனக்கு அதிகம் தெரியும். என் மனசாட்சி படி தற்போது இருக்கும் சூழ்நிலையில் தமிழ்நாட்டை நான் இந்த சொற்பொழிவில் கூறியுள்ள படி ஒளிர வைத்து, அனைத்து குடிமக்களும் சந்தோசமாக வாழ, நான் தமிழ்நாட்டின் முதல்வராவதே மிகச் சிறந்தது. நான் நிச்சயமாக தமிழ்நாட்டை உலகின் மிகவும் சந்தோஷமான செழிப்பான தலைசிறந்த மாநிலமாக நம் ஆட்சி அமைந்த 3-வது வருட இறுதிக்குள் உயர்த்துவேன். ஆகவே நன்றாக சிந்தித்து உங்கள் மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் முடிவெடுத்து அந்த முடிவின் படி நாம் ஆரம்பிக்கும் கட்சிக்கு ஆதரவு தந்து நம் நாட்டையும், நம்மையும், நம் சந்ததியினரையும் உலகின் சந்தோஷமான செழிப்பானவர்களாக வாழ வைக்க உதவும்படி நான் உங்களை மிகவும் பணிவுடனும், அன்புடனும் வேண்டிக் கொள்கின்றேன்.
நல்லாட்சி இந்திய அரசியலில் ஒரு புதிய விடியலைக் குறிக்கிறது — அங்கு ஊழல் ஒழிக்கப்பட்டு நேர்மை வெற்றி பெறுகிறது, பணத்தை விட தகுதிக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது, மேலும் ஆட்சி மனசாட்சி மற்றும் நேர்மையால் வழிநடத்தப்படுகிறது.