நம் தமிழ்நாட்டை உலகின் மிகவும் செழிப்பான அனைவரும் சந்தோசமாக வாழும் உலகின் தலைசிறந்த மாநிலமாக ஒளிர வைப்பதற்காகவே நம் தமிழ்நாட்டு மக்களின் செல்வாக்கைப் பெற, Dr. யாவரும் கேளிர்-ஐ பற்றி சொல்ல வேண்டியவைகளைத் தேவையான இடங்களில் சொல்லாமல் இருப்பதும் தவறு என்பதற்காக மட்டுமே தான் இங்கு கீழ்கண்டவைகளைச் சொல்லுகின்றோமே தவிர விளம்பரத்துக்காக அல்ல. எல்லாவற்றையும் கூற நேரமில்லாத காரணத்தால் கீழ்கண்ட மிக சிலவற்றை மட்டுமே இங்கு கூறுகின்றோம். அவர் BE, MBA மற்றும் MANAGEMENT-ல் PhD-யும் முடித்துள்ளார். நம் நாட்டை உலகின் தலைசிறந்த வல்லரசாக மாற்றும் முன் இந்திய மண்ணைத் தாண்டி எந்த வெளிநாட்டுக்கும் சுற்றுலா கூட செல்லமாட்டேன் என BE படிக்கும் போதே நம் நாட்டுப்பற்று காரணமாக சபதம் எடுத்ததனால் அவருக்கு வெளிநாடுகளுக்கு செல்ல பல நிர்பந்தங்கள் வந்தும் அவர் இந்திய மண்ணைத் தாண்டி இன்று வரை எந்த வெளிநாட்டிற்கும் சுற்றுலா கூட சென்றதில்லை.
சாதி, மத பேதங்களால் நம் நாட்டில் மக்களின் ஒற்றுமைக்கு குந்தகம் ஏற்படுவதால் நம் நாட்டில் சாதி, மதம் ஒழிய வேண்டுமென கொள்கை அளவில் மட்டுமல்லாமல் செயலிலும் நடைமுறை படுத்துபவர் தான் Dr. யாவரும் கேளிர். அதனால் தான் நிறைய வருடங்களாக அவர் சாதி, மதம் அற்றவராக இருப்பதுடன் பல வருடங்களுக்கு முன்பே, அவர் தன் பெயரை “ஜோசப் பென்சிகர்” என்பதிலிருந்து “யாவரும் கேளிர்” என Gazette Publication மூலமாக பெயர் மாற்றம் செய்தது மட்டுமல்லாமல் தான் “சாதி மற்றும் மதம் அற்றவர்” என தமிழ்நாடு அரசின் சான்றிதழும் பெற்றார். இத்துடன் மட்டும் நிற்காமல் சாதி, மதம் அற்ற இந்தியா உருவாக வேண்டும் என்னும் தன் கொள்கையை உறுதியுடன் கடைபிடித்து பல கஷ்டங்களும், தடைகளும் வந்தும் தன் மகளை வேறு சாதி, வேறு மதத்தில் திருமணம் செய்து கொடுத்த வாழ்க்கையிலும் கொள்கையைக் கடைபிடிக்கும் கொள்கைவாதி தான் Dr. யாவரும் கேளிர் அவர்கள். அவர் தான் இறந்த பிறகும் தான் மனித குலத்திற்கு உதவ வேண்டும் என்பதற்காகவே, தான் இறந்த பிறகு தன் அனைத்து உடல் உறுப்புகளை வேறு மனிதர்களுக்கு உபயோகப் படுவதற்காக Transplant Authority of Tamilnadu-க்கு பல வருடங்களுக்கு முன்பே தன் அனைத்து உறுப்புகளையும் தானம் செய்தது மட்டுமல்லாமல், தன் பூத உடலையும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் அறுத்து படிப்பதற்காக சென்னை மருத்துவக் கல்லூரிக்கும் தானம் செய்துவிட்டார்.
இத்துடன் விளம்பரம் இல்லாமலும் யாரிடமும் எந்த நன்கொடையும் வாங்காமலும், தன் சொந்த பணத்தில் ‘பென்சிகர் பவுண்டேஷன்’ என்னும் ஒரு பொதுத்தொண்டு அறக்கட்டளையையும் நடத்தி சமுதாயத்திற்கு நிறைய சேவைகள் மற்றும் நன்மைகள் செய்தது மட்டுமல்லாமல், 144 வருடங்கள் பாரம்பரியமிக்க அமெரிக்காவின் University of Connecticuit என்னும் பொது ஆராய்ச்சிப் பல்கலைகழகமும் அவரது மேற்கண்ட அறக்கட்டளையும் சேர்ந்து கூட்டு ஆராய்ச்சியும் செய்தார்கள். இந்த ஆராய்ச்சிக்கான முழுசெலவையும் அந்த University கொடுக்க விரும்பிய போதும் அதை வாங்காமல், தன் சொந்த பணத்தையே செலவு செய்தார். தன் அறக்கட்டளைக்கு இன்று வரை வெளிநாட்டில் இருந்து பணம் வாங்குவதற்காக தேவைப்படும் FCRA-க்கு அவர் விண்ணப்பம் கூட செய்ததில்லை. அவருடன் அமெரிக்காவின் மூன்று பேராசிரியர்களும் இணைந்து செய்யபட்ட இந்த ஆராய்ச்சியில் Dr. யாவரும் கேளிர் தான் முதன்மை ஆராய்ச்சியாளர். இந்த ஆராய்ச்சி நம் நாட்டு மக்களின் நன்மைக்காக நடத்தப்பட்டது. இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் மிகவும் பலனுள்ளதாக இருந்ததால், இதன் பல ஆராய்ச்சி கட்டுரைகள் பல உலக முன்னிலை அதிக Impact Factor உடைய ஆய்விதழ்களில் அவர் பெயருடன் அந்த ஆராய்ச்சியில் பங்கெடுத்த மூன்று அமெரிக்க பேராசிரியர்களின் பெயரும் சேர்ந்து பிரசுரமாகி இருந்தது. Dr. யாவரும் கேளிர் PhD பண்ணும் போதும் அவரது PhD சம்பந்தபட்ட பல ஆராய்ச்சிக் கட்டுரைகள் பல சிறந்த ஆய்விதழ்களிலும் பிரசுரம் ஆகியுள்ளது. அவர் ஒரு வாரப் பத்திரிக்கையையும், ஒரு மாதப் பத்திரிக்கையையும் நடத்தியுள்ளார். இதைத் தவிர பல புத்தகங்களையும் எழுதியுள்ளார். Dr. யாவரும் கேளிர் மிகவும் நேர்மையானவர். இதற்கு ஒரு உதாரணம் 2025-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதி ரூ. 1,96,32,950/-ஐ வருமான வரியாக கட்டியுள்ளார்.
உலகை பற்றியும் நம் இந்திய நாட்டை பற்றியும் நம் தமிழ்நாட்டை பற்றியும் தற்போது இருக்கும் அனைத்து அரசியல்வாதிகளைவிடவும் அவருக்கு அதிகம் தெரியும்.
Dr. யாவரும் கேளிர் இங்கு கூறியுள்ள 27 முத்துக்கு முத்தான வாக்குறுதிகளும் அதாவது மாபெரும் சாதனைகளும், நம் Dr. KELIR என்னும் YouTube சேனலில் பதிவேற்றம் செய்ய இருக்கும் இன்னும் பல வாக்குறுதிகளும், மேலும் நம் ஆட்சியில் நாம் சாதிக்க உள்ள நாட்டுக்கு நன்மை பயக்கும் அதிகப்படியான சிறந்த திட்டங்களும், அவர் 1976-ஆம் ஆண்டு BE முதலாம் ஆண்டு படிக்கும் போது தன் கல்லூரி நண்பர்கள் சிலர் “இந்தியர்களை விட அமெரிக்கர்கள் அதிக புத்திசாலிகள்” என கூறியதற்கு அவர் “இந்தியர்கள் புத்தியில் பிற எந்த நாட்டினருக்கும் சளைத்தவர்கள் இல்லை,” என வாதம் செய்ததுடன் அதை நிரூபிக்க, “இந்தியாவை உலகின் தலைசிறந்த செழிப்பான அனைத்து மக்களும் மிகவும் சந்தோசமாக வாழும் வல்லரசாக ஒளிரவைத்து காட்டுவேன்” என அவர்கள் முன்னிலையில் சபதம் எடுத்ததை நிறைவேற்றுவதற்காக அப்போதிலிருந்தே 49 ஆண்டுகளாக சளைக்காமல் அயராது ஆழ்ந்து சிந்தித்து ஆராய்ச்சி செய்து, அதன் மூலம் VISUALIZE பண்ணி அத்துடன் நம் நாட்டிலுள்ள இயற்கை வளங்களையும், மனித வளத்தையும் கணக்கெடுத்து அந்த வளங்களை விஞ்ஞானம், புள்ளியியல், நிதி மேலாண்மை, பொது நிர்வாகம் மற்றும் பல MANAGEMENT நுட்பங்களையும் (உதாரணம்: OPERATIONS RESEARCH-ம் அதற்குட்பட்ட PERT & CPM) உபயோகித்து துல்லியமாக கணித்து, நம் தமிழ்நாட்டை உலகிலேயே மிகச் சிறந்த செழிப்பான அனைவரும் மகிழ்ச்சியாக வாழும் மாநிலமாக ஒளிரவைக்க கால வரையறைகளுடன் கூடிய மிகத் துல்லியமான செயல்திட்டத்தை உருவாக்கி உள்ளதால் தான் இங்கு குறிப்பிட்டுள்ள கால வரம்புகளுக்குள் தான் கூறும் அனைத்து மாபெரும் சாதனைகளையும் அதாவது வாக்குறுதிகளையும் நிச்சயமாக சாதிக்க முடியும் என அவர் ஆணித்தரமாக கூறுகின்றார்.
அவருக்கு அரசியலைப் பற்றியும், எப்படி ஆட்சி செய்தால் நாட்டை மிகவும் செழிப்பாகவும் மற்றும் அனைத்து குடிமக்களை மிகவும் சந்தோஷமாக வாழவைக்கவும் முடியும் என்பது தற்போது இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல்வாதிகளையும் விட நன்றாக தெரியும், ஏனென்றால் நம் நாட்டை முன்னேற்ற 49 வருடங்களாக சளைக்காமல் அயராது ஆழ்ந்து சிந்தித்து ஆராய்ச்சி செய்தது மட்டுமல்லாமல் அதன் பலனாக (I) விஞ்ஞான ஆட்சி (SCIENTIFIC GOVERNANCE) என்னும் தலைப்பில் விஞ்ஞான முறைப்படி நாட்டை எப்படி சிறப்பாக ஆழ வேண்டும் என்னும் ஒரு உலகின் மிகச் சிறந்த புத்தகத்தையும், (II) விஞ்ஞான நீதிபரிபாலினம் (SCIENTIFIC JUDICIARY) என்னும் உலகின் நீதித்துறையையே மாற்றவிருக்கும் இன்னொரு புத்தகத்தையும், (iii) சமுதாய அந்தஸ்து மதிப்பெண் (SOCIAL STATUS SCORE) என்னும் உலகில் நல்லாட்சிக்கு வழிவகுக்கும் மிகச்சிறந்த கருவியான கருத்தை அறிமுகப்படுத்தும் இன்னொரு புத்தகத்தையும் மற்றும் (iv) ஸ்மார்ட் அரசு ஊழியர்கள் (SMART GOVERNMENT EMPLOYEES) என்னும் நல்லாட்சிக்கு மிகவும் இன்றியமையாத ஒரு புதுவகையான திட்டத்தைப் பற்றிய புத்தகத்தையும், அதாவது நான்கு வைரங்களைப் படைத்துள்ளார். இப்புத்தகங்களை இவ்வருடம் நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு முன் பிற அரசியல் கட்சிகள் வெளியிடும் தேர்தல் அறிக்கைகளுக்கு முன் வெளியிட்டால் பிற அரசியல் கட்சிகள் நாம் சாதிக்க உள்ள Dr. யாவரும் கேளிர் கண்டுபிடித்த சாதனைகளை மேற்கண்ட புத்தகங்களிலிருந்து திருடி அச்சாதனைகளைச் சாதிக்கும் வழிமுறைகளை அவர்கள் கண்டுபிடித்ததாக அவர்களின் தேர்தல் வாக்குறுதிகளில் சேர்த்து பொது மக்களை ஏமாற்றி நம் கட்சிக்கு கிடைக்க வேண்டிய ஓட்டுக்களை அவர்கள் பெற்றுவிட்டு அதன் பின் அச்சாதனைகளை செயல்படுத்த மாட்டார்கள். எனவே பிற பெரிய அரசியல் கட்சிகள் இவ்வருடம் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு முன் அவர்களது தேர்தல் அறிக்கைகளை வெளியிட்ட உடனேயே மேற்கண்ட நான்கு புத்தகங்களையும் நாம் வெளியிட உள்ளோம்.
நல்லாட்சி இந்திய அரசியலில் ஒரு புதிய விடியலைக் குறிக்கிறது — அங்கு ஊழல் ஒழிக்கப்பட்டு நேர்மை வெற்றி பெறுகிறது, பணத்தை விட தகுதிக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது, மேலும் ஆட்சி மனசாட்சி மற்றும் நேர்மையால் வழிநடத்தப்படுகிறது.