-
எந்த ஒரு மனிதனும் உண்ண உணவு, தங்க இடம், உடுக்க உடை, மருத்துவ வசதி மற்றும் கல்வி உட்பட எந்த ஒரு அடிப்படைத் தேவைக்கும்
கஷ்டமோ கவலையோ படக்கூடாது. ஆகவே நம் ஆட்சி அமைந்த 30-ஆம் நாளிலிருந்து 18 வயதை அடைந்த ஒவ்வொரு நபருக்கும்
மாதந்தோறும் ரூ.15,000/- மற்றும் அதற்கு குறைவான வயதுடையவர்களுக்கு வயதிற்கு ஏற்ப தொகை வழங்கப்படும்.
-
குடிமக்கள் அனைவருக்கும் தங்கள் தேவைகளை நிறைவேற்ற போதுமான வருமானம் கிடைக்கும் வேலை அல்லது வசதிகளை அரசு
ஏற்படுத்திக் கொடுக்கும். நம் ஆட்சி அமைந்த 5-வது மாத இறுதிக்குள் அரசுவேலை விரும்பும் அனைவருக்கும்
தமிழ்நாடு அரசு வேலை வழங்கப்படும். “ஸ்மார்ட் அரசு ஊழியர்கள் திட்டம்” 3-வது மாதத்திலிருந்து அமலுக்கு வரும்.
-
நம் ஆட்சி அமைந்த 3-வது மாதத்திலிருந்து தமிழ்நாடு முழுவதும் அரசு உணவகங்கள் செயல்படத் தொடங்கும்.
இங்கு உலகின் தலைசிறந்த சத்தான சைவ மற்றும் அசைவ உணவுகள் லாபமின்றி Cost-to-Cost அடிப்படையில் வழங்கப்படும்.
-
18 வயதிற்குக் கீழ் உள்ள குழந்தைகளை வளர்க்க உலகத் தரத்திலான குழந்தைகள் இல்லங்கள் ஒரு வருடத்திற்குள்
செயல்படத் தொடங்கும். கல்வி, விளையாட்டு, ஆராய்ச்சி என அனைத்திலும் உலகின் சிறந்த பயிற்சிகள் வழங்கப்படும்.
-
கடல் நீரிலிருந்து Reverse Osmosis தொழில்நுட்பம் மூலம் தேவைக்குமேல் நீர் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள்
9 மாதங்களுக்குள் அமைக்கப்பட்டு, 24 மணி நேர குடிநீர் ஒரு வருடத்திற்குள் மாநகராட்சிகளில் வழங்கப்படும்.
-
மழைநீரை வீணாக்காமல் பயன்படுத்த அனைத்து நீர் தேக்கங்களும் தூர்வாரப்பட்டு ஆழப்படுத்தப்படும்.
புதிய அணைகளும் கட்டப்படும்.
-
நம் ஆட்சி அமைந்த முதல் நாளிலேயே அனைத்து விவசாய கடன்களும் வட்டியுடன் தள்ளுபடி செய்யப்படும்.
துல்லிய ஆர்கானிக் விவசாயம் 6 மாதங்களுக்குள் நடைமுறைப்படுத்தப்படும்.
-
நம் ஆட்சி அமைந்த முதல் நாளிலிருந்தே பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும்.
-
நம் ஆட்சி அமைந்த முதல் நாளே அனைத்து டோல்கேட்டுகளும் அகற்றப்படும்.
-
3 மாதங்களுக்குள் அரசு மருத்துவமனைகள் உலகத் தரத்திற்கு உயர்த்தப்படும்.
4 ஆண்டுகளில் அனைத்து தகுதியுள்ள மாணவர்களுக்கும் MBBS இடம் கிடைக்கும் அளவிற்கு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படும்.
-
நம் ஆட்சி அமைந்த முதல் நாளே கல்விக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.
எந்த மாணவரும் கல்விக் கட்டணம் செலுத்த தேவையில்லை.
-
18-வது மாதத்திலிருந்து சொந்த வீடு இல்லாத குடும்பங்களுக்கு குறைந்த விலையில் வீடுகள் வழங்கப்பட்டு
4 ஆண்டுகளில் அனைவருக்கும் வீடு உறுதி செய்யப்படும்.
-
படிக்காதவர்களும் வேலை செய்பவர்களும் உட்பட அனைவருக்கும் ஆராய்ச்சி, படைப்பு மற்றும் விளையாட்டிற்கான
உலகத் தர வசதிகள் வழங்கப்படும்.
-
நம் ஆட்சி அமைந்த 37-வது மாதத்திலிருந்து தமிழ்நாட்டு அரசின் அனைத்து வரிகளும் ரத்து செய்யப்படும்.
-
30 மாதங்களில் தமிழ்நாட்டு மக்கள் Maslow’s Self-Actualization நிலையை அடைந்து
உலகிலேயே மிகச் சிறந்த சமூகமாக உருவாகுவர்.
-
அன்பு, நேசம், நேர்மை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு தண்டனை மற்றும் திருத்த முறை நடைமுறைப்படுத்தப்படும்.
-
SSSIA (சமுதாய அந்தஸ்து மதிப்பெண்) மற்றும் உயர் தொழில்நுட்ப கண்காணிப்பு மூலம்
7-வது மாதத்திலிருந்து தமிழ்நாட்டில் குற்றங்கள் இல்லாத நிலை உருவாக்கப்படும்.
-
நிலுவை வழக்குகள் அனைத்தும் சமரசம் மூலம் தீர்க்கப்பட்டு
அனைவருக்கும் புதிய வாழ்க்கை வாய்ப்பு வழங்கப்படும்.
-
7-வது மாதத்திலிருந்து தமிழ்நாடு முழுவதும் தடையற்ற, நிலையான மின் விநியோகம் வழங்கப்படும்.
-
‘கண்ணுக்கு புலப்படாத சொத்துக்களின் அடிப்படையிலான சமுதாய அந்தஸ்து மதிப்பெண் (SSSIA)’
தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்தப்படும்.
-
“அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி” என்பது பழமொழி. முதலமைச்சர் ஊழல் செய்யாமல், முழு வெளிப்படைத் தன்மையுடனும்,
அற்பணிப்புடனும் நாட்டை முன்னேற்ற பாடுபட்டால் அரசு ஊழியர்களும் பொதுமக்களும் அவ்வழியே செயல்படுவார்கள்.
ஆகவே 2026-ஆம் ஆண்டில் முதலமைச்சராக வரும் நான், சிறிதும் ஊழலோ தவறோ இன்றி, தமிழ்நாட்டை முன்னேற்றும்
ஒரே நோக்கத்துடன் கடினமாக உழைப்பேன் என உறுதி அளிக்கின்றேன். இதன் மூலம் தமிழ்நாடு
எதிர்பார்க்கும் வேகத்தில் முன்னேறும்.
-
நம் ஆட்சி அமைந்த 18-வது மாதத்திற்குள் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து சாலைகளும் பாதுகாப்பானதாக மாற்றப்படும்.
சாலைகளின் இருபுறங்களிலும் நடுவிலும் மலர் செடிகளும் சந்தன மரங்களும் வளர்க்கப்பட்டு,
சந்திப்புகளில் ஐந்து நட்சத்திர ஹோட்டல் தரத்தில் சுத்தமான கழிவறைகள் அமைக்கப்படும்.
-
நம் ஆட்சி அமைந்த 3-வது மாதத்திலிருந்து அரசு ஊழியர்களுக்கு அவர்கள் பெற்ற கடைசி மாத ஊதியத்தின்
75% உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும். எந்த பங்களிப்பும் தேவையில்லை.
ஓய்வூதியதாரர் இறந்தால் குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும்.
ஓய்வு பெறும் போதும் பணிக்காலத்தில் உயிரிழந்த போதும் ₹50 லட்சம் பணிக்கொடை வழங்கப்படும்.
-
நம் ஆட்சி அமைந்த 7-வது மாதத்திலிருந்து தமிழ்நாடு அரசின் மையக் கணிணியும்
இணையதள சேவைகளும் உலகின் தலைசிறந்த தரத்தில் செயல்படும்.
அனைத்து குடிமக்களின் சான்றிதழ்கள் மற்றும் விவரங்கள் மையக் கணிணியில் பதிவேற்றம் செய்யப்படும்.
Biometric Identification மூலம் சான்றிதழ்களை பயன்படுத்தலாம்.
-
நம் ஆட்சி அமைந்த முதல் நாளிலிருந்தே உலகிலுள்ள அனைவரிடமிருந்தும் ஆலோசனைகள் வரவேற்கப்படும்.
-
நம் ஆட்சி அமைந்தவுடன் கச்சத் தீவை இந்தியாவுடன் மீண்டும் இணைப்பதற்கான
சட்ட மற்றும் அரசியல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு,
இந்திய மீனவர்களுக்கு இலங்கை வழங்கும் அநீதிகள் தடுக்கப்படும்.
-
நம் ஆட்சி அமைந்த மூன்று மாதங்களுக்குள் சுவிட்சர்லாந்தின் சுரிச் சிட்டியை விட
சிறந்த ஸ்மார்ட் சிட்டிகள் தமிழ்நாட்டில் உருவாக்கப்படும்.
மூன்று ஆண்டுகளில் தமிழ்நாடு உலகின் மிகவும் அழகான மாநிலமாக மாற்றப்படும்.
எல்லா மனிதர்களுக்கும் முன்னேற சிறந்த வாய்ப்பு அளிக்க வேண்டியது அவர்கள் வாழும் நாட்டின் தலையாயக் கடமை என்பதும் என் சித்தாந்தங்களில் ஒன்று. மற்றும் இந்த உலகில் எந்தவொரு மனிதனும் தனது அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்ய எந்த கஷ்டமோ, கவலையோ படக்கூடாது என்பதும் என் இன்னொரு சித்தாந்தம். ஆகவே உலகிலுள்ள எல்லா மனிதர்களுக்கும் தங்களுக்குத் தேவையான சிறந்த சத்தான உணவு, உடை, உறைவிடம், மருத்துவ வசதி, பாதுகாப்பு, கல்வி உட்பட அனைத்து அடிப்படைத் தேவைகளையும் எந்த கஷ்டமோ கவலையோ இல்லாமல் கிடைக்க வைப்பதும் அவர்கள் வாழும் நாட்டிலுள்ள அரசின் மிக முக்கியமான கடமை. நம் கட்சியின் கோட்பாடுகள், கொள்கைகள் மற்றும் வாக்குறுதிகள் அனைத்தும் நம் கட்சியின் மேற்கண்ட சித்தாந்தங்களையும் அடிப்படையாகக் கொண்டது. ஏற்கனவே கூறிய வாக்குறுதிகளின் மேலும் சில விவரங்களைக் கீழே கூறுகின்றோம்.
-
மாதாந்திர அடிப்படை வருமானம் & அரசு வேலை
நம் ஆட்சி அமைந்த 30-ஆம் நாளிலிருந்தே அனைத்து தமிழ்நாட்டு குடிமக்களுக்கும் அவரவர் வயதிற்கு ஏற்ப
மாதந்தோறும் ரூ.5,000 முதல் ரூ.15,000 வரை நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
18 வயதிற்கு மேற்பட்டவர்கள் அரசு வேலைக்கு விண்ணப்பிக்காமல் அல்லது வழங்கப்பட்ட அரசு வேலையை
ஏற்காமல் இருந்தால் இத்தொகை நிறுத்தப்படும். 5 மாதங்களுக்குள் அரசு வேலை வழங்கப்பட்ட பின்
18–58 வயதினருக்கு இத்தொகை தேவையில்லை.
-
அ. நம் ஆட்சியமைந்த 5 மாதங்களுக்குள் அனைவருக்கும் அவரவர் விரும்பும் அரசாங்க வேலைகள்:
நம் ஆட்சி அமைந்த 3-வது மாத இறுதிக்குள் தமிழ்நாட்டில் புதிதாக 5 கோடி நபர்களும், 4-வது மாத துவக்கத்திலிருந்து 5-வது மாத இறுதிக்குள் புதிதாக மேலும் 2½ கோடி நபர்களும் மற்றும் 6-வது மாத துவக்கத்திலிருந்து 7-வது மாத இறுதிக்குள் புதிதாக மேலும் 2½ கோடி நபர்களும் தமிழ்நாடு அரசு வேலையில் பணியமர்த்தப்படுவார்கள். இதற்கான முழுத்திட்டம் என்னிடம் தயாராக உள்ளது. நம் ஆட்சி அமைந்த 7-ஆம் நாளில் இப்பணிகளுக்கான விண்ணப்பம் நம் அரசால் விளம்பரம் செய்யப்படும். சுயதொழில் செய்பவர்களும், தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களும் கூட தமிழ்நாடு அரசு வேலையில் சேர விரும்பினால் விண்ணப்பிக்கலாம்.
2026-ஆம் ஆண்டில் நம் ஆட்சி அமையும் போது தமிழ்நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் சுமாராக 7½ கோடி மக்கள் இருப்பார்கள். இதில் ஏற்கனவே அரசு வேலைகளில் இருப்பவர்களும், தனியார் நிறுவனங்களில் மிக அதிக சம்பளத்தில் சொகுசாக வேலைப் பார்ப்பவர்களும், நல்ல வருமானம் கிடைக்கும் சுயதொழில் செய்பவர்களும் மற்றும் 58 வயதைத் தாண்டியவர்களும் இருப்பார்கள். அவர்கள் நம் அரசின் புதிய வேலைகளை விரும்பமாட்டார்கள். ஆகவே புதிதாக தமிழ்நாடு அரசின் வேலைகளை விரும்பும் தமிழ்நாட்டு குடிமக்களின் எண்ணிக்கை 7½ கோடியை விட குறைவாகத்தான் இருக்கும். ஆனால் நம் ஆட்சி அமைந்த ஐந்தாவது மாத இறுதிக்குள் தமிழ்நாட்டில் புதிதாக 7 ½ கோடி நபர்கள் தமிழ்நாடு அரசு வேலையில் அமர்த்தப்பட உள்ளதால், தமிழ்நாடு அரசு வேலைக்கு விண்ணப்பித்த 18 வயதிற்கு மேற்பட்ட தமிழ்நாட்டு குடிமக்கள் அனைவருக்கும் தமிழ்நாடு அரசு வேலை அளித்தபின் தான், மீதமிருக்கும் காலி இடங்கள் பிற மாநிலத்தவர்களால் நிரப்பப்படும். ஆகவே தமிழ்நாடு அரசுவேலையை விரும்பும் அனைத்து தமிழ்நாட்டு குடிமக்களுக்கும் நிச்சயமாக தமிழ்நாடு அரசுவேலை நம் ஆட்சி அமைந்த 5-வது மாத இறுதிக்குள் கிடைக்கும். இதனால் தமிழ்நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் நம் ஆட்சி அமைந்த 5-வது மாத இறுதிக்குள் முற்றிலும் ஒழிந்துவிடும்.
ஆ. ஸ்மார்ட் மற்றும் சாதாரண அரசு ஊழியர்கள்:
இதுவும் நம் நாட்டை முன்னேற்ற நான் 49 வருடங்கள் சிந்தித்ததில் மலர்ந்த ஒரு முத்து. நம் ஆட்சி அமைந்த 3-வது மாதத்திலிருந்து ஸ்மார்ட் அரசு ஊழியர்கள் என்னும் ஒரு புது வகையான அரசு ஊழியர்களும் தமிழ்நாடு அரசு வேலைகளுக்குத் தேர்வு செய்யப்படுவார்கள்.
இவர்களுக்கு ஐபிஎஸ் அதிகரிகள் மற்றும் விமானிகள் அணிவதை போன்ற கண்ணியம் மிக்க சீருடைகள் வழங்கப்படும். இந்த சீருடைகள் அவர்களின் துறையையும் பதவியையும் பொறுத்து மாறுபடும். ஸ்மார்ட் ஊழியர்களாக தேர்வு செய்யபட்டவர்களுக்கு பாதி சம்பளத்துடன் ஆறு மாத காலம் பயிற்சிக்கல்லூரிகளில் பயிற்சி அளிக்கப்படும். இப்பயிற்சியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 75% சதவீத சம்பளத்துடன் மருத்துவர்களுக்கு மருத்துவத் துறையிலும் மற்ற அனைவருக்கும் போலீஸ், நிர்வாகம், கணினி, வண்டி ஓட்டுதல், பட்டறை, கணக்காளர், விவசாயம், கட்டிடம் கட்டுதல், தொழிற்சாலை, நீர்பாசனம் போன்ற அனைத்து துறைகளிலும் திரும்பவும் மொத்தமாக ஆறு மாதங்கள் பயிற்சி வழங்கப்படும். மருத்துவர்களும் தாங்ககள் விருப்பப்பட்டால் அனைத்து துறைகளிலும் பயிற்சி பெறலாம். இந்த பயிற்சிகளையும் வெற்றிகரமாக முடிப்பவர்கள் முழு சம்பளத்துடன் வேலைக்கு அமர்த்தப்படுவார்கள்.
இவர்களுக்கு சாதாரண அரசு ஊழியர்களை விட 25 சதவீதம் அதிக சம்பளமும் பிற அதிக சலுகைகளும், வசதிகளும் வழங்கப்படும். இவர்கள் திடீர் திடீரென அதிகமான எண்ணிக்கைகளில் ஆட்கள் தேவைப்படும் வேறு துறைகளுக்கு மாற்றப்படுவார்கள்.
உதாரணமாக சட்டம் ஒழுங்கிற்கு அதிக எண்ணிக்கைகளில் போலீஸ் தேவைப்படும்போது மற்ற துறைகளில் பணி அமர்த்தப்பட்டுள்ள ஸ்மார்ட் அரசு ஊழியர்கள் உடனடியாக போலீஸ் துறைக்கு மாற்றப்படுவார்கள்.
ஸ்மார்ட் அரசு பணியாளர்கள் பற்றிய விரிவான விவரங்கள் நான் வெளியிட உள்ள ‘ஸ்மார்ட் அரசு ஊழியர்கள்’ என்னும் புத்தகத்திலும், ‘விஞ்ஞான ஆட்சி’ என்னும் புத்தகத்திலும் இருக்கும்,
- அரசு உணவகங்கள் :
ஒவ்வொரு வீட்டிலும் தனித்தனியாக சமையல் செய்வதால் குடிமக்களின் நேரம் நிறைய விரையமாகிறது. இந்த நேர விரயத்தைத் தவிர்த்து அதனால் மிச்சம் வரும் நேரத்தில் தமிழ்நாட்டு மக்கள் ஆராய்ச்சி செய்தல், புத்தகம் எழுதுதல், ஆக்க வேலைகள் செய்தல், புதிய படைப்புகள் படைத்தல் போன்ற மனித குலத்திற்கு நன்மை பயக்கும் செயல்களில் ஈடுபட வசதி செய்து கொடுத்தால் நிறைய மக்கள் இவைகளை செய்வார்கள். இதற்காக தமிழ்நாட்டின் எல்லா இடங்களிலும் அரசு உணவகங்கள் தேவையான எண்ணிக்கைகளில் நம் ஆட்சி அமைந்த மூன்றாவது மாதத்திலிருந்தே அரசால் நடத்தப்படும். சைவ உணவகங்களும், அசைவ உணவகங்களும் தனித்தனியாக செயல்படும். அதிக எண்ணிக்கைகளில் அரசு உணவகங்கள் தமிழ்நாட்டில் செயல்பட உள்ளதால் அவைகளுக்கு தேவையான மூலப் பொருட்களை தமிழ்நாடு அரசு மூலப்பொருட்கள் உற்பத்தியாகும் இடங்களில் இருந்து மொத்தமாக வாங்கும், இதனால் மூலப்பொருட்களின் கொள்முதல் விலை மிகவும் குறைவாக இருக்கும். இதனால் உணவு உற்பத்தி செலவு மிக மிக குறைவாக இருக்கும். இந்த அரசு உணவகங்கள் செலவுக்கு செலவு அதாவது Cost to Cost என்ற அடிப்படையில் லாபநோக்கு இல்லாமல் அரசால் நடத்தப்படுவதால் இந்த உணவகங்களில் உணவின் விலை குடிமக்கள் தங்கள் வீட்டில் சமையல் செய்வதை விட மிக குறைவாகவே இருக்கும். இவ்வாறு உலகிலேயே நம் தமிழ்நாடு தான் முதன்முதலாக தன் குடிமக்களுக்கு உணவு தட்டுப்பாடு அறவே இல்லாமல் அவர்களுக்கு தேவையான எல்லா நேரங்களிலும், மிகவும் சத்தான மற்றும் சுவையான பலதரப்பட்ட உணவுவகைகள் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களை விட சிறப்பாகவும், சுத்தத்திலும் சுகாதாரத்திலும் உலக தரத்தில் மிகவும் சிறந்ததாக நம் ஆட்சி அமைந்த மூன்றாவது மாதத்திலிருந்து வழங்கும்.
-
அ. குழந்தைகளை அரசு வளர்க்கும்:
உலகின் வருங்காலம் இன்றைய குழந்தைகளின் கையில் தான் உள்ளது. ஆகவே நம் குழந்தைகளை மிகவும் நல்லவர்களாக, ஆரோக்கியம் உள்ளவர்களாக, சிறந்தவர்களாக, பகுத்தறிவு உள்ளவர்களாக, சுயசிந்தனை அதாவது Original Thinking உள்ளவர்களாக, அறிவாற்றல் உள்ளவர்களாக, படைப்பாளிகளாக மற்றும் படித்தவர்களாக உருவாக்க வேண்டியது நம் முக்கியமான கடமையும் பொறுப்பும் ஆகும். ஆகவே நம் ஆட்சி அமைந்த ஒரு வருடம் முடிவதற்குள் தமிழ்நாடு முழுவதும் தேவையான அளவிற்கு அரசின் சிறுவர்கள் மற்றும் மாணவர்கள் இல்லங்கள் செயல்படத் துவங்கும். அரசு இல்லங்களில் வளர்க்கப்படும் குழந்தைகள் தங்கள் சொந்த இல்லங்களில் வளரும் குழந்தைகளை விட மிகவும் சிறப்பான முறையில் பராமரித்து வளர்க்கப்படுவார்கள். +2 படிப்பு முடியும் வரை மட்டும்தான் குழந்தைகள் அரசு இல்லங்களில் வளர முடியும்.
ஆ. 18 வயது முதல் 59 வயது வரை உள்ளவர்களுக்கான அரசு இல்லங்கள்:
நம் ஆட்சி அமைந்த 7-வது மாதத்திலிருந்து தமிழக குடிமக்கள் யார் வேண்டுமானாலும் அரசு இல்லங்களில் ஒரு வருடத்திற்கு குறையாமல் தங்கும்படி குடியேறலாம். இந்த அரசு இல்லங்கள் லாப நோக்கு இல்லாமல் செலவுக்கு செலவு (Cost to Cost) என்னும் அடிப்படையில் சிறப்பாக நிர்வகிக்கப்பட இருப்பதால் இங்கு தங்குபவர்களுக்கு தங்கள் சொந்த வீட்டில் ஏற்படும் செலவை விட மாத பில் தொகைக் குறைவாகவே இருக்கும். ஆண்களுக்கும், பெண்களுக்கும், குடும்பங்களுக்கும் தனித்தனி இல்லங்கள் செயல்படும். இவர்கள் தாங்கள் விரும்பும் வேலைகளையோ, தொழில்களையோ, ஆராய்ச்சிகளோ செய்யலாம்.
இ. 60 வயதும் அதற்கு மேலும் உள்ளவர்களுக்கான அரசு இல்லங்கள்:
நம் ஆட்சி அமைந்த 7-வது மாதத்திலிருந்து 60 வயதும் அதற்கு மேலும் உள்ள விருப்பப்படும் அனைத்து தமிழ்நாட்டு குடிமக்களுக்கும் நல்ல வசதிகள் உள்ள இல்லங்களை நம் அரசு செயல்படுத்தும். ஆண்களுக்கும், பெண்களுக்கும், கணவன்-மனைவியாக தங்குபவர்களுக்கும், சைவ மற்றும் அசைவ உணவு உண்பவர்களுக்கும் தனித்தனியாக இல்லங்கள் செயல்படும். இவ்வில்லங்களில் நல்ல நூலகங்களும், சிறந்த இன்டர்நெட் மற்றும் ஆராய்ச்சி செய்ய வசதிகளும் இருக்கும். இவர்களும் தாங்கள் விரும்பும் வேலைகளையோ, தொழில்களையோ, ஆராய்ச்சிகளோ செய்யலாம்.
-
உலகின் தலைசிறந்த தரத்தில் நீர் தட்டுப்பாடின்றி வழங்கப்படும்:
தமிழ்நாட்டில் 1076 கிலோ மீட்டர் கடற்கரை உள்ளது. கடல் நீரிலிருந்து நம் தேவைகளுக்கு நீரை பிரித்தெடுப்பதால் கடலில் நீர் தட்டுப்பாடு ஏற்படாது. குடிநீர், விவசாயம், தொழிற்சாலை, போன்ற எல்லா விதமான தேவைகளுக்கும் தகுந்த தரத்தில் நீரை கடல் நீரிலிருந்து எளிதாக பிரித்தெடுக்கும் Reverse Osmosis போன்ற தொழில்நுட்பங்கள் தற்போது நிறைய உள்ளன.
கடற்கரைகளில் தமிழ்நாட்டிற்கு தேவையான அளவு நீரை தேவையான தரங்களில் பிரித்தெடுக்கும் Reverse Osmosis தொழிற்சாலைகள் தேவையான எண்ணிக்கைகளில் நம் ஆட்சி அமைந்த 9 மாதங்களுக்குள் நிறுவப்பட்டு செயல்பட துவங்கும். இந்த Reverse Osmosis ஆலைகளில் இருந்து தமிழ்நாட்டில் உள்ள எல்லா ஊர்களுக்கும் நீரை கொண்டு செல்லும் ராட்சச குழாய்களும் நம் ஆட்சி அமைந்த 9 மாதங்களுக்குள் அமைத்து முடிக்கப்பட்டு செயல்பட துவங்கும். நம் ஆட்சியில் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து வீடுகளுக்கும் நல்ல சுத்தமான குடிநீர் உலகிலேயே மிகச்சிறந்த தரத்தில் 24 மணிநேரமும் குழாய்கள் வழியாக தமிழ்நாட்டின் அனைத்து மாநகராட்சிகளிலுள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் நம் ஆட்சி அமைந்த ஒரு வருடத்திற்குள்ளும், தமிழ்நாட்டின் அனைத்து நகராட்சிகளிலுள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் நம் ஆட்சி அமைந்த 15 மாதங்களுக்குள்ளும், தமிழ்நாட்டின் அனைத்து பேரூராட்சிகளிலுள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் நமது ஆட்சி அமைந்த 18 மாதங்களுக்குள்ளும், தமிழ்நாட்டின் அனைத்து ஊராட்சிகளிலுள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் நமது ஆட்சி அமைந்த 21 மாதங்களுக்குள்ளும் நிச்சயமாக 24 மணிநேரமும் நம் அரசு வழங்கும்.
- புது நீர்தேக்கங்கள் அமைப்பதுடன் அனைத்து நதிகளும் இணைக்கப்படும் :
நம் ஆட்சியின் துவக்கத்திலிருந்தே ஒவ்வொரு மழைக்காலத்திற்கு முன்னும் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நீர் தேக்கங்களும் தூர்வாரப்பட்டு, ஆழப்படுத்தி, நிறைய நீரை சேமித்து வைக்க வழி செய்யப்படும்.
- விவசாயத்திற்கு அனைத்து வசதிகளும் மிகச்சிறந்த ஊக்கமும் அளிக்கப்படும்:
நம் ஆட்சி அமைந்த முதல் நாளிலேயே தமிழ்நாடு முழுவதும் உள்ள தமிழ்நாட்டு விவசாயிகள் அரசிடம் வாங்கிய நிலுவையில் உள்ள, விவசாய கடன்கள் அனைத்தும் வட்டி உட்பட முழுமையாக தள்ளுபடி செய்யப்படுவதுடன் விவசாயத்திற்கு வங்கிகளில் வாங்கியக் கடன்களையும் அரசே வங்கிகளுக்கு வட்டியுடன் திருப்பிச் செலுத்தும். நம் ஆட்சி அமைந்தவுடன் நம் அரசு விவசாயத்திற்கு அதி முக்கியத்துவமும் மிகச் சிறந்த ஊக்கமும் கொடுக்கும். ஆர்கானிக் சிறுதானியங்கள் மக்களுக்கு மிகவும் ஆரோக்கியமானது என்பதால் அவைகளை உண்பதற்கு குடிமக்களும், அவைகளை அதிக அளவில் விவசாயம் செய்வதற்கும் விவசாயிகளும் ஊக்கப்படுத்தப்படுவார்கள்.
விவசாயப் பொருட்களை சேமித்து வைக்கும் கிடங்குகள் அந்தந்த ஊர்களில் விளையும் அனைத்து விளை பொருட்களையும் மிகவும் பத்திரமாக சேமித்து வைக்கும் தரத்தில் தேவையான அளவில் தேவையான எண்ணிக்கைகளில் நம் ஆட்சி அமைந்தவுடன் போர்க்கால அடிப்படையில் வேகமாக சிறந்த தரத்தில் நெல் போன்ற அழுகாமல் இருக்கும் தானியங்களை சேமிக்க குளிரூட்டப் படாத சேமிப்பு கிடங்குகள் நம் ஆட்சி அமைந்த 7 மாதங்களுக்குள்ளும், காய்கறிகள், பழங்கள் போன்ற அழுகிப்போகும் விளை பொருட்களை சேமிக்க குளிர் சேமிப்பு கிடங்குகளும் நம் ஆட்சி அமைந்த 15 மாதங்களுக்குள்ளும் கட்டி முடிக்கப்பட்டு உபயோகத்திற்கு வரும். இந்த கிடங்குகளில் விவசாயிகள் வாடகைக் கொடுக்காமல் தங்கள் விளைப் பொருட்கள் அனைத்தையும் ஒரு வருடம் வரை சேமித்து வைக்கலாம். தாங்கள் விரும்பும் போது எடுத்துக் கொள்ளலாம். இதனால் அறுவடை சமயங்களில் விளைப்பொருட்களின் விலை குறைவாக இருந்தால் அச்சமயங்களில் இக்கிடங்குகளில் இலவசமாக சேமித்து வைத்து விட்டு, பின் விலை அதிகம் கிடைக்கும் போது அவைகளை எடுத்து விற்று விவசாயிகள் அதிக பயனடையலாம். இதை தவிர, நம் அரசு விளைபொருட்களை பதப்படுத்தி CAN-களில் அடைத்து, பல மடங்கு மதிப்பை கூட்டி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவுள்ளதால், நம் அரசே விளை பொருட்களை விவசாயிகளிடமிருந்து நல்ல விலை கொடுத்து வாங்கும். விவசாயிகள் அரசுக்கு தான் விற்கவேண்டும் என்ற எந்த கட்டாயமும் நம் ஆட்சியில் இருக்காது. இவ்வாறு நம் அரசு விவசாயிகளை எல்லாவிதத்திலும் ஊக்குவிப்பதுடன் நம் அரசும் நேரடியாக மிகப் பெரிய அளவில் விவசாயத்தையும் செய்யும். நம் அரசின் தலையாய நோக்கம் தமிழ்நாட்டின் அனைத்து விவசாயத்தையும் ஆர்கானிக் விவசாயமாக மாற்றுவது. விளைப்பொருட்களின் உற்பத்தியை தமிழ்நாட்டின் தேவையை விட பல மடங்கு அதிகப்படுத்தி தமிழ்நாட்டின் தேவைக்கு போக மீதமுள்ள தானியங்களை அரசே பதப்படுத்தி டின்களில் அடைத்து லேபில்கள் போட்டு தானியங்களின் மதிப்பை பல மடங்கு கூட்டி தமிழ்நாட்டில் நம் அரசால் தயாரிக்கப்படும் அனைத்து பொருட்களும், அதாவது விவசாயப் பொருட்கள், தொழிற்சாலை பொருட்கள், மருந்து பொருட்கள் உட்பட அனைத்தும், “TAMIL PRODUCTS” என்னும் ஒரே BRAND-ல் உலகம் முழுவதும் விற்பனை செய்யப்படும். தமிழ்நாட்டு அரசால் தயாரிக்கப்படும் அனைத்து பொருட்களும் ஒரே BRAND-ல் விற்பனை செய்யப்பட இருப்பதால், ADVERTISEMENT செலவு, மார்கெட்டிங் செலவு முதலிய செலவுகள் மிகவும் குறைவதுடன், TAMIL PRODUCTS-ன் BRAND IMAGE-ம் உலகில் மிகவும் சிறந்ததாக உயர்வது மட்டுமின்றி தமிழ்நாட்டுக்கு அதிக லாபமும் பெருமையும் கிடைக்கும். இந்த லாபம் தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவும்.
தமிழ்நாட்டில் நம் அரசு செய்யவுள்ள விவசாயம் உலகின் தலை சிறந்த துல்லிய ஆர்கானிக் விவசாயம் அதாவது ஆர்கானிக் PRECISION FARMING. இம்முறையில் செயற்கைக்கோள் உதவியுடன் பயிர்களின் உள்வயல் மாறுபாடுகளை அளவிட்டு, அவைகளின் அடிப்படையில் பயிர்களுக்கு தேவைப்படும் நீர், இயற்கை உரம், இயற்கை பூச்சி மருந்து, மற்றும் அனைத்து ஆர்கானிக் விவசாய உள்ளீடுகளை தேவைக்கு சிறிதும் குறையாமலும், கூடாமலும் GPS (Global Positioning System) உதவியுடன் REAL TIME தேவைகளுக்கு ஏற்றார் போல பயிர்களுக்கு அளிக்கப்படும். இவைகளை செயல்படுத்த ட்ரோன்ஸ் (Drones), பயிர் கொத்துக்கள் (Crop Clusters), செயற்கைக்கோள்கள், சென்சார்கள், கணிணிகள், கணிப்பொறி-மென்பொருள், செயற்கை-நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம் முதலியவைகளை உபயோகித்து விவசாயம் செய்யும் இடத்தில் உள்ள ஈரப்பதம், வெப்பம், உரம் முதலியவற்றை கணக்கிட்டு அவைகளை தேவையான அளவில் பயிர்களுக்கு அளித்து இஸ்ரேலையும் மிஞ்சும் விதத்தில் உலகிலேயே தலைசிறந்த துல்லிய விவசாயத்தை நம் தமிழ்நாடு செயல்படுத்தும். இதனால் உற்பத்தித்திறன் அதிகரித்து ஒவ்வொரு ஏக்கரிலும் பல மடங்கு அதிக மகசூல் கிடைக்கும். சுருக்கமாக சொன்னால் நம் அரசு விவசாயத்தில் தற்போது உலகின் முன்னணி நாடுகளான நெதர்லாந்து, இஸ்ரேல் அமெரிக்கா போன்ற நாடுகளை விட சிறந்த வழிமுறைகளை கடைபிடித்து இரண்டு வருடங்களில் அந்நாடுகளையும் முந்தும் அளவிற்கு புதிய சிறந்த விவசாய தொழில்நுட்பங்களைக் கண்டுபிடித்து செயல்படுத்தி உலகிலேயே விவசாயத்திலும் முன்னிலை வகித்து பெருமை அடையும்.
-
நம் ஆட்சியமைந்த முதல் நாளிலேயே பூரண மது மற்றும் புகையிலை ஒழிப்பு:
மது உட்பட்ட போதைப் பொருட்கள் அனைத்தும் அதை உபயோகிப்பவர்களுக்கு நோய்கள், முன்கூட்டிய மரணம், வேலை செய்ய வெறுப்பு, பொருளாதார சீர்கேடு, குடும்பப் பிரச்சனைகள், சண்டை சச்சரவுகள், வாகன விபத்துக்களால் உயிரிழப்பு, நாட்டுக்கு சீர்கேடு மற்றும் இன்னும் பல கெடுதல்களை ஏற்படுத்தும்.
மேலும் எப்பொதும் குடித்துவிட்டு அதிக போதையில் இருப்பதால் நாட்டு நடப்பை பற்றியும் ஆட்சியை பற்றியும் மக்களால் யோசிக்க முடிவதே இல்லை. இது ஆட்சியாளர்கள் செய்யும் தவறுகளை மக்கள் கேள்வி கேட்க முடியாத சூழலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஆட்சியாளர்கள் கேள்வி கேட்க ஆளில்லை என்ற தைரியத்தில் லஞ்சம் வாங்குவது, நாட்டைக் கொள்ளையடிப்பது, அரசியல் படுகொலைகள் செய்வது உட்பட பல கொடிய குற்றங்களை சிறிதும் அச்சமின்றி செய்கின்றனர். இதற்காக தான் ஆட்சியாளர்கள் டாஸ்மாக் கடைகளை அதிகளவில் திறந்து விற்பனைக்கு Target Fix பண்ணி Target-ஐ மாதத்துக்கு மாதம், வருடத்துக்கு வருடம் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றனர். இதனால் மாணவர்கள் மட்டுமின்றி மாணவிகள் கூட தமிழ்நாட்டில் மது பழக்கத்திற்கு அடிமை ஆகின்றனர். 2025-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஆக்ஸ்ஃபோர்ட் ஆஃப் சவுத் இந்தியா என புகழ்ச்சியாக கூறப்படும் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் அரசு உதவிப்பெறும் சிறந்த மகளிர் மேல்நிலை பள்ளி ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் ஆறுக்கும் அதிகமான மாணவிகள் பள்ளி இடைவேளை நேரத்தில் வகுப்பறைக்கு உள்ளேயே வட்டமாக அமர்ந்து கைகளில் பிளாஸ்டிக் கப்புகளில் மதுவுடன் வழக்கமாக சர்வ சாதாரணமாக மது அருந்தும் செய்திகள் வெளிவந்தது வெறும் ஒரு உதாரணம் மட்டும் தான். இது தமிழ்நாட்டில் சர்வசாதாரணமாக நடக்கும் ஒரு நிகழ்வு. தமிழ்நாட்டில் மது மற்றும் போதை பழக்கம் அதிகப்பட்டதால் சண்டை-சச்சரவு, கொலைகள், கற்பழிப்புகள், தற்கொலைகள், வாகன விபத்துக்கள் முதலியன மிக அதிக அளவில் நடைப்பெற்றுக் கொண்டே இருப்பதால் குடிமக்கள் தமிழ்நாட்டில் அச்சத்துடனும், கவலையுடனும் வாழும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் நம் கட்சி தான் நிச்சயமாக 2026-ல் ஆட்சி அமைக்கும் என்பதால் மக்கள் கவலைப்படவோ, பயப்படுவோ தேவையில்லை. ஆட்சியாளர்கள் டாஸ்மாக் மூலம் அரசுக்கு கிடைக்கும் லாபம் ஆட்சி நடத்த தேவைப்படுகிறது என கூறுவது மிகவும் ஆபத்தானதும், கண்டிக்கதக்கதும், நாட்டு மக்களை முட்டாள்கள் ஆக்குவதுமான வாதம். தற்போது தமிழ்நாட்டை மாறிமாறி ஆட்சி செய்த இரண்டு கட்சிகளின் அரசுகளும், அரசின் பணத் தேவைக்காக டாஸ்மாக் மூலமாக மதுவிற்கும் குற்றத் தொழிலை அரசு மூலமாக நடத்துவதை போல, தமிழ்நாட்டை ஆட்சி செய்ய மேலும் பணம் தேவைபட்டால் எதிர்காலத்தில் இக்கட்சிகளின் அரசு ஆட்சிக்கு வந்தால் திருட்டுத் தொழில், அடியாள் தொழில், பாலியல் தொழில் போன்ற குற்றத் தொழில்களையும் அரசின் மூலமாக நடத்தவும் வாய்ப்புள்ளது.
டாஸ்மாக் நடத்துவது தங்கள் கட்சி தலைவர்களின் ஆலைகளில் உற்பத்தியாகும் மதுவை அதிக விலைக்கு டாஸ்மாக் கடைகளுக்கு பில் இல்லாமல் விற்று, அந்த ஆலை வைத்திருக்கும் அரசியல்வாதிகள் GST மற்றும் வருமனவரி கட்டாமல் அதிக லாபம் சம்பாதிக்க மட்டுமே அன்றி அரசை நடத்தும் பணத்திற்காக அல்ல என தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளை நன்கு தெரிந்தவர்கள் கூறுகின்றனர்.
நம் தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக நம் ஆட்சி அமைந்த முதல் நாளிலேயே டாஸ்மாக் உட்பட அனைத்து மது, சிகரெட், புகையிலை மற்றும் எல்லா விதமான போதைப் பொருட்களின் தயாரிப்புகளும், விற்பனைகளும் தமிழ்நாட்டில் முழுமையாக தடை செய்யப்படும்.
ஏற்கனவே அதிக எண்ணிக்கையிலான தமிழ்நாட்டு மக்கள் போதை பழக்கத்திற்கு அடிமைப்பட்டுள்ளதால், ஒரே நாளில் திடீரென போதை பொருட்கள் கிடைக்காத சூழ்நிலை ஏற்படும் போது அவர்களுக்கு உடல் ரீதியிலும், மன ரீதியிலும் உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இவ்வாறு உபாதைகள் ஏற்படாமல் அவர்கள் ஆரோக்கியமாக இருப்பதற்காக தமிழ்நாடு முழுவதும் தேவையான எண்ணிக்கைகளில் சிறந்த போதை மறுவாழ்வு மையங்களை, நம் ஆட்சியின் துவக்கத்திலிருந்தே நம் அரசு நடத்தும்.
- முதல் நாளிலேயே டோல்கேட்டுகள் அனைத்தும் ஒழிக்கப்படும்:
அரசு சாலை வரி வசூல் செய்வது உயர்தர சாலைகள், விரைவு சாலைகள், பாலங்கள் உட்பட அனைத்து சாலைகளையும், பாலங்களையும் அமைப்பதற்கும் அவற்றை பராமரிப்பதற்கும் தான். அரசு ஏற்கனவே இருக்கும் சாலைகளை உயர்தரமாக பராமரிப்பதற்கு டோல்கேட் கட்டணம் வசூலிப்பதில் எந்த நியாயமும் இல்லை. ஏனெனில் சாலை வரி வசூலிப்பதே அதற்காக தான். ஆகவே நாம் ஆட்சிக்கு வந்த முதல் நாளிலேயே தமிழ்நாட்டில் உள்ள டோல்கேட்டுகள் அனைத்தும் அகற்றப்படும்.
-
உலகின் தலைசிறந்த மருத்துவ சிகிச்சை:
மருத்துவ வசதி குடிமக்களின் அடிப்படைத் தேவைகளில் முக்கியமான ஒன்று என்பதால் குடிமக்களிடம் பணம் வாங்காமல் உலகின் தலைசிறந்த அனைத்து மருத்துவ வசதிகளும் நம் ஆட்சியில் தமிழ்நாட்டில் அனைத்து குடிமக்களுக்கும் கிடைக்கும். நம் ஆட்சி அமைந்த இரண்டு வருடங்களுக்குள் தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் குறைந்தது புதிதாக ஒரு அலோபதி மருத்துவக் கல்லூரியும், மூன்று வருடங்களுக்குள் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் மேலும் குறைந்தது ஒரு அலோபதி மருத்துவக் கல்லூரியும் சிறந்த மருத்துவமனையுடன் செயல்படும். நம் ஆட்சி அமைந்த நான்கு வருடங்களுக்குள் MBBS பயில விரும்பும் தமிழ்நாட்டிலுள்ள 50 வயதுக்கு உட்பட்ட தகுதியுள்ள அனைத்து தமிழ்நாட்டு குடிமக்களுக்கும் MBBS பயில இடம் கிடைக்கும் அளவுக்கு தேவையான அளவில் மேலும் பல அலோபதி மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்படும். இதனால் தமிழ்நாட்டில் MBBS படிக்க விருப்பப்படும் தகுதியுள்ள அனைவருக்கும் MBBS படிக்க நிச்சயமாக வாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு மருத்துவர்-குடிமக்கள் விகிதத்தை உலகிலேயே அதிக அளவிற்கு கொண்டு வந்து நாட்டு மக்களுக்கு உலகிலேயே சிறந்த மருத்துவ சேவையும் நம் அரசு செய்யும். இந்த அலோபதி மருத்துவக் கல்லூரிகள் அனைத்திலும் மருத்துவப் பட்ட மேற்படிப்பிற்கும் அதிக அளவில் இடங்கள் உருவாக்கப்படும். இதனால் தமிழ்நாட்டில் MD மற்றும் MS போன்ற முதுகலை பட்ட டாக்டர்களும் அதிக அளவில் நம் ஆட்சியில் உருவாக்கப்படுவார்கள். இத்துடன் தமிழ்நாட்டில் ஏற்கனவே உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளும் நம் ஆட்சி அமைந்த மூன்று மாத காலத்திற்குள் தனியார்கள் நடத்தும் மிகச் சிறந்த மருத்துவமனைகளை விட மிகச்சிறந்தவைகளாக செயல்படும்.
தமிழ்நாட்டில் நம் ஆட்சியில் செயற்கை நுண்ணறிவு மூலம் நோய்களை கண்டறிதலும் மருத்துவம் செய்தலும் அதிகளவில் செயல்படுத்தப்படும். மரபணு நோய்கள், கேன்சர் பொன்ற நோய்களுக்கு CRISPR முறையில் வைத்தியம் செய்யும் முறையும் மிக அதிகளவில் நம் ஆட்சியில் செயல்படும். மருத்துவத் துறையில் 3D தொழில்நுட்பமும் அதிகளவில் பயன்படுத்தப்படும். இவைகள் மனித குலத்திற்கு நன்மை பயக்குமென்பதால் இவைகளை உபயோகித்து நோய்களை தடுப்பதற்கும் குணப்படுத்துவதற்கும் இருக்கும் சட்ட சிக்கல்கள் நம் ஆட்சியில் தவிர்க்கப்படும். சுருக்கமாக சொன்னால் நம் தமிழ்நாட்டில் மருத்துவ துறையிலும் உலகின் முன்னிலை ஆராய்ச்சிகள் உலகிலேயே அதிக அளவில் மேற்கொள்ளப்பட்டு உலகின் தலை சிறந்த மருத்துவ வசதிகள் அனைத்து குடிமக்களுக்கும் அவர்களிடம் பணம் இல்லாவிடினும் கிடைக்கும். இத்துடன் மருத்துவத்தின் ஒவ்வொரு துறையிலும் உலகின் தலை சிறந்த மருத்துவர்களை தமிழ்நாடு அரசு அதிகச் சம்பளம், மற்றும் அதிக வசதிகள் கொடுத்து தமிழ்நாட்டிற்கு கவர்ந்து ஈர்த்து, அவர்களை தமிழ்நாட்டிலுள்ள எல்லா மருத்துவமனைகளுக்கும் மருத்துவ சிறப்பு ஆலோசனை கொடுக்க வைத்து, தமிழ்நாட்டின் மருத்துவத்துறையை உலகின் தலைசிறந்த மருத்துவத் துறையாக மாற்றும்.
நம் ஆட்சி அமைந்த மூன்றாம் மாதத்திலிருந்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஆங்கில முறை மருத்துவத்தைத் தவிர குறைந்தது ஒரு AYUSH மருத்துவமனையாவது தமிழ்நாடு அரசால் நடத்தப்படும். இவ்வாறு நம் ஆட்சியில் அனைத்து முறைகளிலான மருத்துவ சிகிச்சைகளும் தமிழகம் முழுவதும் உலகின் தலைசிறந்த தரத்தில் கிடைக்க உள்ளதால் தமிழ்நாட்டு மக்களுக்கு உலகின் தலைசிறந்த மருத்துவ சிகிச்சைகள் அவர்களிடம் பணம் இல்லாவிடினும் கிடைக்கும். தமிழ்நாட்டு குடிமக்கள் யாராக இருந்தாலும் உரிமையுடன் எந்த அரசு மருத்துவமனையிலிருந்தும் பணம் இல்லாமலும் உலகின் மிகச்சிறந்த சிகிச்சைகளை பெற்றுக் கொள்ளலாம்.
-
அனைத்து கல்விகளுக்கும் நம் ஆட்சியின் முதல் நாளிலிருந்தே அரசு பணம் கொடுக்கும்:
நம் ஆட்சி அமைந்த முதல் நாளிலிருந்தே தமிழ்நாட்டிலுள்ள எந்த ஒரு கல்வி நிறுவனமும் மாணவர்களிடமிருந்து எந்த கட்டணமும் வசூலிக்காது. இதனால் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு பணக்கஷ்டம் ஏற்படின் அந்நிறுவனங்கள் விரும்பினால், தமிழ்நாடு அரசு அங்கு வேலை பார்க்கும் அனைவருக்கும் சம்பளத்தை நேரடியாக அவர்களது வங்கி கணக்கில் செலுத்துவதுடன் அந்த கல்வி நிறுவனங்களின் அனைத்து செலவுகளையும் செய்யும். தமிழ்நாட்டு குடிமக்களுக்கு கல்விக்காக ஏற்கனவே கொடுத்த அனைத்து கல்விக் கடன்களும் அதன் வட்டியுடன் நம் ஆட்சி அமைந்த முதல்நாளிலேயே முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படும். இதனால் வங்கிகள் தமிழ்நாட்டில் பயிலும் தமிழ்நாட்டு குடிமக்களுக்கு கொடுத்த கல்விக் கடன்களை தமிழ்நாடு அரசே வட்டியுடன் வங்கிகளுக்கு திருப்பி செலுத்தும். நம் ஆட்சி அமைந்த தொண்ணூறாம் நாளிலிருந்து தமிழ்நாட்டிலுள்ள எல்லா கல்வி நிறுவனங்களிலும் எல்லா மாணவர்களுக்கும் சுவையான, சத்தான சைவ மற்றும் அசைவ உணவுகள் காலை, பகல், மதியம், மாலை, இரவு உட்பட விருப்பப்படும் போதெல்லாம் Unlimited -ஆக பணம் கொடுக்காமல் விருப்பத்திற்கு ஏற்றார் போல் உண்ணலாம்.
நம் ஆட்சி அமைந்த முதல் நாளிலிருந்து தமிழ்நாட்டில் எந்த கல்வி நிறுவனங்களிலும் எந்த கல்விக்கும் எந்த கட்டணமும் செலுத்த தேவையில்லாத காரணத்தாலும் மாணவர்களுக்கு அவர்கள் கல்விக்காக பயணம் செய்யும் அரசு பேருந்து கட்டணங்கள், தங்கும் விடுதிக் கட்டணங்கள், புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், மற்றும் உணவும் அரசு இலவசமாக வழங்க உள்ளதாலும் மற்றும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் நல்ல வருமானம் கிடைக்கும் வரை குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் அரசு மாதந்தோறும் பணம் கொடுக்க இருப்பதாலும், மாணவ மாணவியர்கள் கல்விக்காக கடன் வாங்க வேண்டிய தேவை நம் ஆட்சி அமைந்த முதல் நாளிலிருந்து அறவே இல்லாமல் போய்விடும். பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ, மாணவிகள் தங்களுடைய சீருடைகளையும், கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் தங்களுக்கு தேவையான சிறந்த உடைகளையும் வாங்க, தங்கள் குடும்பத்திற்கு போதிய பணம் இல்லாவிடில் அரசு பணம் கொடுக்கும். இதனால் ஏழை குடும்பத்தில் உள்ள மாணவ, மாணவிகளும் மிக பணக்கார குடும்பத்தில் உள்ள மாணவ மாணவிகளைப் போல, எந்த வித்தியாசமும் இல்லாமலும், எந்த குறையும் இல்லாமலும், சந்தோசமாக பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் சென்று சிறப்பாக படிக்கலாம்.
- சொந்த வீடு இல்லாதவர்களுக்கு மிகச் சிறந்த வீடுகள் மிகக் குறைந்த விலையில் முன்பணம் இல்லாமல் கொடுக்கப்படும்:
நம் ஆட்சி அமைந்த 18-வது மாதத்திலிருந்து வீடு வாங்குபவர்களின் சம்பளத்திலிருந்து கஷ்டம் இல்லாமல் சிறுக சிறுக வட்டியில்லாமல் செலவுக்கு செலவு என்னும் முறையில் லாபநோக்கு மற்றும் முன்பணமும் இல்லாமல் நம் அரசால் விருப்பமுள்ள குடிமக்களுக்கு வீடுகள் வழங்கப்படும்.
-
அ. ஆராய்ச்சிகளிலும் தமிழ்நாடு உலகில் தலைசிறந்து திகழும்:
நம் ஆட்சியில் ஆராய்ச்சிகளுக்கு மிகவும் முக்கியத்துவம் அளித்து மனித குலத்திற்கு பலன் கொடுக்கு
ம் தலைச்சிறந்த ஆராய்ச்சிகள் அதிக எண்ணிக்கைகளில் சிற்ப்பாக நடைபெறும். நம் ஆட்சி அமைந
்தவுடன் ஏற்கனவே இருக்கும் கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், ஆராய்ச்சி கூடங்கள் முதலி
யவைகள் எல்லாவற்றிலும் அவைகளின் முழு திறனுக்கும் ஆராய்ச்சிகள் நடைபெறும். இத்துடன் உலகின்
தலைச்சிறந்த ஆராய்ச்சி நிறுவனங்களையும் அதிக எண்ணிக்கையில் நம் அரசு தமிழ்நாட்ட
ில் துவக்கும். நம் அரசால் நடத்தப்படும் ஆராய்ச்சிகளில் ஆராய்ச்சியாளர்கள் முழுநேரம
ாகவோ அல்லது பகுதி நேரமாகவோ ஆராய்ச்சிகளை மேற்கொள்ளலாம். இந்த ஆராய்ச்சிகள் இரண்டு
வகைகளில் நடைபெறும். அவைகள்:
(அ) முழுக்க முழுக்க அரசு பணத்தில் நடைபெறும் ஆராய்ச்சிகள்.
(ஆ) நிதி உதவியில் நடைபெறும் ஆராய்ச்சிகள். (Sponsored Research)
நம் ஆட்சி அமைந்த மூன்று வருடங்களுக்கு உள்ளாகவே ஆராய்ச்சிகளிலும் உலகின் மிகச் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்கும். அறவே கல்வி கற்காத நபர்களும் ஆராய்ச்சி செய்ய ஊக்குவிக்கப்படுவார்கள். அவர்களின் கல்வித் தகுதியை விட அவர்கள் செய்யும் ஆராய்ச்சியினால் கிடைக்கும் பயன்கள் தான் முக்கியம். நம் அரசின் இலக்கு நாம் ஆட்சி அமைத்த ஒரு வருடத்திற்குள் 10 லட்சம் நபர்களையும் இரண்டு வருடங்களுக்குள் 25 லட்சம் நபர்களையும் மூன்று வருடங்களுக்குள் 60 லட்சம் நபர்களையும் நான்கு வருடங்களுக்குள் 1 கோடி நபர்களையும் ஆராய்ச்சியில் ஈடுபட வைப்பது. மேற்கண்ட எண்ணிக்கையில் தமிழ்நாட்டு குடிமக்கள் ஆராய்ச்சி செய்ய வராவிடில் பிற மாநிலத்தவர்களுக்கும், பிற நாட்டினர்களுக்கும் ஆராய்ச்சி செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டு தமிழ்நாடு ஆராய்ச்சியிலும் உலகின் மிகச்சிறந்த முன்னிலை மாநிலமாக திகழும்.
ஆராய்ச்சி செய்வது வெறும் PhD டிகிரி வாங்குவதற்கு மட்டுமல்ல. ஆராய்ச்சிகள் மனித குல மேம்பாட்டிற்கு உதவி புரிவதாக இருக்க வேண்டும். ஆராய்ச்சிகளுக்கு ஆகும் செலவுகளை விட அவ்வாராய்ச்சிகளால் வரும் பலன்கள் அதிக வருவாய் ஈட்டி தருவதாகவும் இருக்க வேண்டும்.
நம் ஆட்சியில் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆராய்ச்சிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
- மனிதனின் மரணத்தை தடுப்பது, வயது முதிராமல் தடுப்பது மற்றும் இளமையாக மாற்றுவது
- உடல் ஆரோக்கியம்
- மருத்துவம்
- சர்க்கரை நோய், புற்றுநோய் போன்ற தற்போது வரை நிரந்தரமாகக் குணப்படுத்த மருந்து கண்டுபிடிக்காத வேறு பல நோய்கள்
- பழமையான இந்திய மருத்துவ முறைகளான ஆயுர்வேதம், சித்த மருத்துவம், யோகாசனம், தியானம், இயற்கை முறை மருத்துவம் முதலியன
- இயற்கை பேரழிவை தடுப்பது
- கரிம (ஆர்கானிக்) மற்றும் நிலையான (Sustainable) விவசாயம்
- செயற்கை அறிவு ரோபோக்கள் மற்றும் ரோபோ நீதிபதி
- புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் நிலையான ஆற்றல்
- ஆட்சி முறை
- மின்சார சேமிப்பு
- கம்பியில்லா மின் பரிமாற்றம்
- புதிய வழிகளில் மின்சாரம் தயாரித்தல்
- புதுவிதமான ஆற்றல்களை கண்டுபிடிப்பது
- மனித மூளையை கணினியுடனும் மற்ற மூளைகளுடனும் இணைப்பது
- மனித மரபணுவைத் தேவையான விதத்தில் மாற்றி அமைத்தல்
- மனித உடல் உறுப்புகளை ஆராய்ச்சி கூடத்தில் வளர்த்தல்
- மனித உடல் உறுப்புகளை முப்பரிமாண அச்சிடுதல் முறையில் தயாரித்தல்
- டிஎன்ஏ-வை டிஜிட்டல் தரவில் (DATA) சேமித்தல்
- விண்வெளி காலணித்துவம் மற்றும் வேறு கிரகங்களில் உள்ள உயிர்களைப் பற்றிய ஆராய்ச்சி
- மனித இனத்தையும் மற்ற உயிர்களையும் அழிவிலிருந்து காப்பாற்றுதல்
- இயற்கையில் இருந்து தொழில்நுட்பங்களைத் தத்தெடுப்பது
- இயற்கையின் மர்மங்கள்
- விலங்குகள் மற்றும் தாவரங்களின் இனக்கலப்பு (Cross Breeding)
- உலக மக்கள் மகிழ்ச்சியாகவும் அமைதியுடனும் வாழ வழி தேடுதல்
மேற்சொன்ன ஆராய்ச்சிகள் மட்டுமல்லாமல் மனித சமுதாயம் முன்னேற தேவையான கணக்கற்ற ஆராய்ச்சிகளும் நமது ஆட்சியில் மும்மூரமாக மேற்கொள்ளப்பட்டு தமிழ்நாடு ஆராய்ச்சியிலும் உலகின் தலைமையகமாக பிரகாசிக்கும். “சோம்பேறியின் மூளைப் பிசாசு பட்டறை” என்பது பழமொழி. தமிழக அரசால் தமிழகத்தில் வாழும் அனைத்து தமிழக குடிமக்களின் அடிப்படைத் தேவைகளும் எந்த கஷ்டமும் இல்லாமல் நம் ஆட்சியில் பூர்த்தி செய்யப்பட இருப்பதால் குடிமக்கள் சோம்பேறிகளாக இருந்தால் அவர்களின் மூளை மனித குலத்திற்கு கெடுதல் பயக்கும் விஷயங்களை நாடும். ஆகவே நம் ஆட்சியில் மனித குலத்திற்கு நன்மை பயக்கும் ஏராளமான ஆராய்ச்சிகளை அடையாளம் கண்டு அவ்வாராய்ச்சிகளை செய்வதற்கு ஊக்கமும் வசதி வாய்ப்புகளும் பண உதவியும் நம் அரசால் அளிக்கப்படும். இதனால் தமிழ்நாடு நிச்சயமாக நிறைய நோபல் பரிசுகளையும் மற்றும் உலகின் அரிய விருதுகளையும் பெறும்.
-
தமிழ்நாட்டில் அனைத்து வரிகளும் நம் ஆட்சியில் ஒழிக்கப்படும்:
நம் ஆட்சியமைந்த மூன்றாவது வருடத்திலிருந்து தமிழ்நாடு அரசு வசூலிக்கும் அனைத்து வரிகளும் முற்றிலும் ஒழிக்கப்படும். அசையா சொத்துக்களின் பத்திரப்பதிவு கூட அரசுக்கு பணம் செலுத்தாமல் செய்து கொள்ளலாம். சாலை வரியும் கிடையாது. தமிழ்நாட்டில் தமிழ்நாடு அரசாங்கம் வசூலிக்கும் GST அதாவது State GST முற்றிலும் ஒழிக்கபடும். அனைத்து வரிகளும் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டால் அரசாங்கம் நடத்துவதற்கு அரசுக்கு எவ்வாறு பணம் கிடைக்கும் என்பது 49 வருடங்களாக நான் சளைக்காமல் ஆழ்ந்து சிந்தித்து ஆராய்ச்சி செய்ததன் மூலம் கண்டுபிடித்தது.
-
மிக அதிக குடிமக்கள் தன்திறல் நிறைவெய்தல் (Self-Actualization) படிநிலையை அடைவார்கள்:
நம் ஆட்சி அமைந்த 30 ஆம் நாளிலிருந்து தமிழ்நாட்டில் வாழும் அனைத்து குடிமக்களின் அனைத்து தேவைகளும் முழுமையாக நிவர்த்தி செய்யப்பட இருப்பதாலும், அனைவரும் 7-வது மாதத் துவக்கத்திலிருந்து முழு பாதுகாப்புடன் எந்த விதமான அச்ச உணர்வு இல்லாமல் வாழ இருப்பதாலும், அனைத்து குடிமக்களுக்கும் தேவையான அனைத்து நன்மைகளும் கிடைக்கப் பெற்று, நம் ஆட்சி அமைந்த முப்பது மாதங்களுக்குள் தமிழ்நாட்டில் மிக அதிக எண்ணிக்கைகளில் குடிமக்கள் மாஸ்லோவின் தேவை படியமைப்பு கோட்பாட்டில் (Maslow’s Law of Hierarchy of Needs) குறிப்பிடும் தன்திறல் நிறைவெய்தல் (Self Actualization) படிநிலையை அடைய உள்ளதால் ஆராய்ச்சிகள் பெருகும். நிறைய புதிய கண்டுபிடிப்புகள் ஏற்பட்டு அதிக எண்ணிக்கைகளில் நோபல் பரிசுகளும் தமிழ்நாட்டுக்கு கிடைக்கும்.
-
தண்டனைகள் அனைத்தும் அன்பை அடிப்படையாக் கொண்டது:
மனித இனம் சந்தோஷமாக வாழ ஒவ்வொரு மனிதனும் பிறரை அன்புடனும் நேசத்துடனும் நடத்த வேண்டும். தாய் தன் குழந்தை அறியாமையால்தான் தவறு செய்வதாக எண்ணி தன் குழந்தை தவறே செய்தாலும் தண்டிக்க மாட்டாள். அதேபோல் உலகத்தில் உள்ள அனைவரும் பிறர் அறியாமையால் தான் தவறு செய்கிறார்கள் என எண்ணி தவறு செய்பவர்களை பிறர் மன்னித்தால் மட்டும் தான் இவ்வுலகில் சமாதானமும் சந்தோஷமும் நிலை நிற்கும். ஊழல் உட்பட அனைத்து குற்றங்களும் நடைபெறாமல் தடுக்கவல்லது அன்பு மட்டும்தான். அன்பு காட்டும் ஒருவரிடம் லஞ்சம் வாங்கவோ குற்றம் செய்யவோ முடியாது. உலகையே அழிக்க வல்ல அணு மற்றும் உயிரியல் ஆயுதங்களை கொண்டுள்ள இவ்வுலகை காக்கும் ஒரே ஆயுதம், அன்பு மட்டும்தான். அன்பிருப்பவர்களை பழிவாங்க முடியாது. “கண்ணுக்கு கண் என்பது உலகம் முழுவதையும் குருடாக்கிவிடும்” என மகாத்மா காந்தி கூறினார். அதாவது அனைவரும் பிறரை பழிவாங்க ஆரம்பித்தால் முடிவு முழுமையான அழிவாகத்தான் இருக்கும்.
ஆகவே நம் ஆட்சியில் தண்டனைகள் அன்பை அடிப்படையாகக் கொண்டு மட்டும்தான் வடிவமைக்கப்படும். அதாவது ஒரு தாய் தன் குழந்தையை அது திரும்பவும் தவறு செய்யக்கூடாது என்பதற்காக அன்பை மனதில் வைத்துக்கொண்டு தண்டிப்பதை போல் தான் நமது ஆட்சியிலும் குற்றவாளிகள் திரும்பவும் குற்றம் செய்யாமல் இருப்பதற்காகவும் ஏற்கனவே குற்றம் செய்யாதவர்கள் குற்றம் செய்தால் நிச்சயமாக தண்டனை கிடைக்கும் என பயந்து குற்றம் செய்யாமல் இருப்பதற்காகவும் மட்டும்தான் தண்டிக்கப்படுவார்கள். பழி வாங்குவதற்காக தண்டனைகள் கொடுக்கப்பட மாட்டாது. திருவள்ளுவரின் 314 ஆவது குறள் ஒரு தெய்வத்தன்மை வாய்ந்த குறள். “இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்” இக்குறளில் கூறியுள்ள படி தீமை செய்தவருக்கு அளிக்கும் மிகப்பெரிய தண்டனை தீமை செய்தவருக்கு நன்மை செய்வது மட்டும்தான். ஏனெனில் தீமை செய்தவருக்கு நன்மை செய்தால் அத்தீமையை செய்தவரின் மனசாட்சி இப்படிப்பட்ட நல்லவருக்கு நான் தீமை செய்தேனே என தீமை செய்தவரை உறுத்திக் கொண்டே இருக்கும். இதனால் சமாதானமும் சந்தோஷமும் நிச்சயமாக ஏற்படும். அதுமட்டுமல்லாமல் அந்த தீமை செய்தவன் எவ்வளவு பெரிய அயோக்கியனாக இருந்தாலும் அவன் மனிதனாக இருந்தால் திரும்பவும் அவருக்கு அவனால் தீமை செய்ய முடியாது. தீமை செய்தவருக்கு பழிக்கு பழியாக தீமை செய்தால் அவருக்கு விரோதமும் திரும்பி பழிவாங்கும் எண்ணமும் ஏற்படும். இதனால் பகைமை வளர்வதுடன் சமாதானமும் சந்தோஷமும் கெட்டுவிடும்.
இதனால் நம் ஆட்சியில் குற்றவாளிகளுக்கு தண்டனைகளை வடிவமைக்கும் போது மேற்கண்ட திருக்குறளை நிச்சயமாக மனதில் வைத்துக்கொள்வோம்.
-
அ. ஊழல் உட்பட அனைத்து குற்றங்களும் முற்றிலுமாக ஒழிக்கப்படும்:
துவக்கத்தில் மனிதர்கள் தங்களின் அல்லது தங்களுக்கு மிகவும் வேண்டியவர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவே சிறிய குற்றங்களை செய்கின்றனர். உதாரணம்: ஒருவர் தனது சொந்தக் குழந்தை பசியால் அழுது அவதிப்படும்போது அக்குழந்தைக்கு உணவளிப்பதற்காக உணவை திருட வாய்ப்புள்ளது. இவ்வாறு ஒருவர் பல சிறிய சிறிய திருட்டில் ஈடுபட்ட பின் அவர் பெரிய திருட்டுக்களிலும் ஈடுபட வாய்ப்புள்ளது. நம் ஆட்சி அமைந்த 30-வது நாளிலிருந்து தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் அனைத்து அடிப்படை தேவைகளும் முழுமையாக நிறைவேற்றப்பட உள்ளதால் யாரும் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்காக திருட்டோ, வேறு எந்த குற்றமோ செய்ய வேண்டிய தேவை இருக்காது. நம் ஆட்சியில் அனைவருக்கும் அவர்களது படிப்பிற்கும் திறமைக்கும் ஏற்ற மிகச்சிறந்த நல்ல ஊதியத்துடன் கூடிய அரசு வேலைகள் நாம் ஆட்சி அமைத்த ஐந்து மாதத்திற்குள் நிச்சயமாக கிடைக்க இருப்பதால் யாருக்கும் பணக்கஷ்டம் வர வாய்ப்பே இல்லை. எல்லோரும் நல்ல அரசு வேலையில் இருக்க உள்ளதால் யாரும் குற்றங்கள் செய்து தங்களது மதிப்பையும் மரியாதையையும் குறைக்க விரும்ப மாட்டார்கள். இது மட்டுமல்லாமல் நமது ஆட்சியில் கண்ணுக்கு புலப்படும் சொத்திற்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்கப்பட மாட்டாது என்பதாலும் கண்ணுக்கு புலப்படும் சொத்தை சேர்க்க யாரும் முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள். இதனால் நிச்சயமாக ஊழல், திருட்டு, அடுத்தவரின் சொத்தை அபகரிப்பது போன்ற சொத்தை சேர்க்க செய்யப்படும் குற்றங்கள் அனைத்தும் முழுமையாக நின்றுவிடும்.
இத்துடன் நமது ஆட்சியில் கண்ணுக்கு புலப்படாத சொத்தின் அடிப்படையிலான சமுதாய அந்தஸ்து மதிப்பெண் நம் ஆட்சி அமைந்த 7-வது மாதத் துவக்கத்திலிருந்து அமலுக்கு வரும் என்பதாலும், இந்த மதிப்பெண்ணுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க இருப்பதாலும், நன்னடத்தை, நேர்மை, கண்ணியம், மரியாதை, கௌரவம், புகழ், பெருமை, போன்றவற்றின் அடிப்படையில் ஒவ்வொரு நபரின் கண்ணுக்குப் புலப்படாத சொத்தின் அடிப்படையில் சமுதாய அந்தஸ்து மதிப்பெண் கணக்கிடப்படுவதாலும், குற்றங்கள் புரிந்தால் அவரது கண்ணுக்கு புலப்படாத சொத்தின் அடிப்படைகளான சமுதாய அந்தஸ்து மதிப்பெண் மிகவும் குறையும் என்பதாலும், நம் ஆட்சி அமைந்த 6 மாத காலத்திற்குள் கழிவறை, ராணுவ மற்றும் ரகசிய இடங்கள் தவிர அனைத்து பொது இடங்கள், அனைத்து தெருக்கள், அனைத்து அலுவலகங்கள் உட்பட எங்கும் மைக்குகளுடன் கூடிய சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு அவைகள் அரசின் மையக் கணிணியுடன் கம்பியில்லா முறையில் இணைக்கப்பட்டு யாருக்கு வேண்டுமானாலும் உலகின் எங்கிருந்தும் இணையம் வழியாக நேரலையிலோ அல்லது தாங்கள் விரும்பும் நேரத்திலோ மிகத் துல்லியமாக பார்க்கும்படி இருக்கும் என்பதாலும், குற்றங்கள் செய்யும் நபர்கள் நிச்சயமாக உடனடியாகக் கண்டுபிடிக்கப்பட்டு சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட்டு நீதிமன்றம் வழியாக நிச்சயமாக விரைவில் தண்டணை பெறுவர்கள் என்பதாலும், குற்றம் செய்த எந்த நபரும் தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது என்பதாலும் எந்த நபரும் லஞ்சம் உட்பட எந்த ஊழலும் செய்யவோ, திருடவோ மற்றும் வேறு எந்த ஒரு குற்றமோ நிச்சயமாக செய்ய மாட்டார்கள். இதனால் நம் ஆட்சியில் தமிழ்நாட்டில் குற்றங்கள் அறவே நடைபெறாமல் இருப்பதுடன் எல்லா மக்களுக்கும் தங்களுக்கு தேவையான அனைத்தும் கிடைக்க உள்ளதாலும், குற்றம் செய்த எவரும் தண்டனை பெறாவிட்டாலும் எந்த ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக் கூடாது என்பதும் நம் சித்தாந்தங்களில் ஒன்று என்பதாலும் குடிமக்கள் அனைவரும் மிகவும் பாதுகாப்பாகவும், நிம்மதியாகவும், சந்தோஷமாகவும், எந்த கவலையோ ஆபத்தோ இல்லாமலும் வாழ்வார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
ஆ. குற்றங்களுக்கான காரணங்களைக் கண்டறிய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும்:
நம் ஆட்சி அமைந்த 30-ஆம் நாள் முதல் குடிமக்கள் தங்களது அனைத்து அடிப்படைத் தேவைகளையும் நிறைவேற்ற நம் தமிழ்நாட்டு அரசிடம் இருந்து பணம் பெற்றுக்கொள்ளலம் என்பதாலும், நம் ஆட்சி அமைந்த ஐந்து மாதங்களுக்குள் அனைத்து குடிமக்களுக்கும் வேலை கிடைக்க இருப்பதாலும், நம் ஆட்சி அமைந்த முதல் நாளிலிருந்தே பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட இருப்பதாலும், அரசு உணவகங்கள் மூலமாக அனைவருக்கும் உணவு வழங்கும் வசதி கொண்டுவர இருப்பதாலும், படித்தவர்களுக்கும் படிக்காதவர்களுக்கும் ஆராய்ச்சிகள் செய்யவும், படைப்புகள் படைக்கவும் ஊக்கமும் வசதியும் செய்து கொடுப்பதாலும், அனைவரும் நம் ஆட்சியில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும் சூழல் நிலவ இருப்பதாலும், தமிழ்நாட்டில் குற்றங்கள் செய்வதற்கு நேரம் இல்லாமல் இருக்கும் சூழல் நிலவ இருப்பதாலும், குற்றங்கள் செய்வதற்கு எந்தவித தேவையும் இல்லாமல் இருக்கும் சூழ்நிலை நிலவ இருப்பதாலும், குற்றங்கள் செய்வது மிகவும் கடினம் என்னும் சூழ்நிலை நிலவ இருப்பதாலும், குற்றங்கள் செய்யாமல் வாழ்வது தான் மிகவும் எளிதானதாக இருக்க இருப்பதாலும், யாராவது நம் ஆட்சியில் தமிழ்நாட்டில் குற்றங்கள் செய்வின் அவர் எதற்காக அந்த குற்றம் செய்தார் என ஆராய்ச்சி செய்து கண்டுபிடிக்கப்படும். இந்த ஆராய்ச்சியில் கண்டுபிடித்ததின் அடிப்படையில் திரும்பவும் இந்த மாதிரி குற்றங்கள் இனிமேல் நடக்காமல் இருக்க தேவையான அனைத்தையும் நம் அரசு செய்து குற்றங்கள் அறவே நடைபெறாமல் பார்த்துக்கொள்ளும்.
இ. வெளிப்படைத் தன்மை:
நம் ஆட்சி அமைந்த 7-வது மாதத் துவக்கத்திலிருந்தே முதலமைச்சர் உட்பட அனைத்து தமிழ்நாடு அரசு ஊழியர்களும் தங்களது உடையில் நெஞ்சுக்கு நேராக வெளியில் தெளிவாக தெரியும்படி தங்களது பெயர் தகட்டை அதாவது Name Plate-ஐ தங்கள் வேலை நேரம் முழுவதும் அணிந்து கொள்ள வேண்டும். இந்த பெயர் தகட்டில் தங்களுடைய பெயரும், தங்களுடைய கண்ணுக்கு புலப்படாத சொத்தின் அடிப்படையிலான சமுதாய அந்தஸ்து எண் அதாவது SSSIA-வும் இருக்கும். இத்துடன் இந்த பெயர் தகட்டில் மிக உயர் தரத்திலுள்ள மிகச் சிறிய கேமராவும் மைக்கும் பொருத்தப்பட்டிருக்கும். இந்த பெயர் தகட்டை நம் அரசே அனைத்து ஊழியர்களுக்கும் கொடுக்கும். இந்த பெயர் தகடு விமானி அணியும் பெயர் தகடை போல மிகவும் பாங்கானதாக அதாவது decent-ஆகவும், அழகாகவும் இருக்கும். பெயர் தகட்டில் இருக்கும் கேமராவும், மைக்கும் அவர்கள் வேலை நேரம் முழுவதும் சுற்றி நடக்கும் நிகழ்வுகள் அனைத்தையும் கம்பியில்லா முறையில் அரசின் மையக் கணிணியில் வீடியோவாக பதிவேற்றம் செய்து கொண்டே இருக்கும். இவைகளை தவிர முதலமைச்சர் அலுவலகம் உட்பட அனைத்து அரசு அலுவலகங்களிலும், அனைத்து தெருக்களிலும், அனைத்து பொது இடங்களிலும், தொடர்ச்சியாகவே படம் பிடித்து கொண்டு இருக்கும் அதிக திறன் வாய்ந்த உயர்தர கேமராக்களும் மைக்குகளும் நம் ஆட்சி அமைந்த ஆறு மாதங்களுக்குள் பொருத்தப்பட்டு செயல்பாட்டிற்கு வரும். இவைகள் இங்கு நடக்கும் நிகழ்வுகள் அனைத்தையும் அரசின் மையக் கணிணியில் ஏழாம் மாதத் துவக்கத்திலிருந்தே வீடியோவாக பதிவேற்றம் செய்துகொண்டே இருக்கும். இவற்றை இணையம் வழியாக யார் வேண்டுமானாலும் தாங்கள் விரும்பும் நேரத்தில் உலகத்தில் எங்கிருந்தும் பார்க்கலாம்.
நம் ஆட்சி அமைந்த முதல் நாளிலிருந்தே பொதுமக்களும் தங்கள் உடம்பில் கேமரா மற்றும் மைக்குகளை பிறருக்கு தொந்தரவு இல்லாமல் பொருத்திக் கொண்டு எல்லா அரசு அலுவலகங்களுக்கும் பொது இடங்களுக்கும் செல்லலாம். அவர்கள் சுற்றிலும் நடக்கும் நிகழ்வுகள் அனைத்தையும் அரசின் மையக் கணிணியில் வீடியோவாக நம் ஆட்சி அமைந்த 7-ஆம் மாதத் துவக்கத்திலிருந்து பதிவேற்றம் செய்யலாம். இந்த வீடியோ கருவிகளை இராணுவ இடங்கள், கழிவறைகள் மற்றும் தடைசெய்யபட்ட இடங்களில் மட்டும் தான் உபயோகிக்கக் கூடாது. யார் வேண்டுமானாலும் நேரலையாகவோ, தங்களுக்கு வசதியான நேரத்திலோ அரசின் மையக் கணிணியிலிருந்து இவைகள் அனைத்தையும் இணையம் வழியாக பார்க்க வசதிகள் இருக்கும். இவ்வாறு உலகத்தில் இதைப்போல் இதுவரை வேறு எந்த அரசும் செய்யாத வெளிப்படைத் தன்மையை நம் அரசு செய்யும். இவ்வாறு எல்லா இடங்களிலும் வெளிப்படைத் தன்மை இருப்பதால் குற்றம் செய்தால், குற்றம் செய்தவர்கள் உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என்பதால் பயந்து, நம் ஆட்சி அமைந்த ஏழாம் மாத துவக்கத்திலிருந்து யாரும் லஞ்சம் கேட்கவோ, லஞ்சம் கொடுக்கவோ, திருடவோ, கொள்ளையடிக்கவோ, பெண்களிடம் தவறு செய்யவோ மாட்டார்கள். இதனால் நம் ஆட்சி அமைந்த ஏழாம் மாத துவக்கத்திலிருந்து இருந்து கன்னிப் பெண்கள் கூட தனியாக எந்த பயமுமில்லாமல் பத்திரமாக நள்ளிரவில் கூட விலையுயர்ந்த தங்க, வைர மற்றும் பிளாட்டின நகைகளை அணிந்து கொண்டு தமிழ்நாட்டில் எந்த மூலை முடுக்கில் வேண்டுமானாலும் செல்லலாம். தமிழ்நாட்டில் நம் ஆட்சி அமைந்த ஏழாம் மாத துவக்கத்திலிருந்து எந்த வீட்டிற்கோ, அலுவலகத்திற்கோ பூட்டு தேவைப்படாது.
-
குற்றம் செய்து திருந்தியவர்கள் நல்லவர்களாக நடத்தப்படுவார்கள்:
ஒரு குற்றத்திற்கு ஒருவரை இரண்டு முறை தண்டிக்கக்கூடாது. ஜெயில் தண்டனையை முடித்து வெளியே வந்தவர்களை அரசு வேலைகளுக்கோ அல்லது வேறு எந்த வேலைகளுக்கோ தகுதி அற்றவர்களாக்குவது ஒரு குற்றத்திற்கு இரண்டு தடவை தண்டனைக் கொடுப்பதாகும். ஒருவர் ஜெயில் தண்டனையை அனுபவித்தப் பின் குற்றத்திலிருந்து அவர் முற்றிலுமாக விடுபட்டவராக கருதப்பட வேண்டும். அவரை வேலைக்கு தகுதி அற்றவராக்குவது அவரது மீதமிருக்கும் வாழ்க்கையை கெடுப்பது மட்டுமல்லாமல், அவருக்கு நேர்மையாக வேலை செய்து வாழ வேண்டிய வழியை அடைத்து அவரை தன் வாழ்க்கை செலவுக்காக திருட்டு, கொள்ளை மற்றும் மேலும் பல குற்றங்களை செய்ய கட்டாயப்படுத்துவதாகும். ஆகவே நாட்டில் குற்றங்கள் குறைவதற்கு பதிலாக அதிகரிக்கும். எனவே சிறைத் தண்டனை அனுபவித்து முடித்து விடுதலை ஆனவரை சாதாரண குடிமகனாக/குடிமகளாக நடத்தி அவருக்கு சிறைத்தண்டனை அனுபவிக்காத குடிமக்களுக்குள்ள அனைத்து வாய்ப்புக்களும் சமமாக அளிப்பது தான் சரி. சிறைத்தண்டனை அனுபவித்து விடுதலை ஆனவர்களுக்கு நல்வாழ்க்கை அமைப்பதற்கு உதவ வேண்டும். ஆகவே, வேலை விண்ணப்பம் மற்றும் இதரப் படிவங்களில் சிறைத்தணடனை பெற்றவரா எனக் கேட்டு, அவர் சிறைத்தண்டனை அனுபவித்திருந்தால் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்படுவது அல்லது அதை ஒரு தகுதி இழப்பாக/குறைவாகக் கருதுவது தவறானது. இதனால் நம் அரசு, சிறையிலிருந்து வெளியே வந்தவர்களை சிறைக்கே செல்லாத நல்லவர்களை நடத்துவது போல எந்த வித்தியாசமும் இல்லாமல் நடத்த வேண்டும் என்னும் சட்டத்தை அமல்படுத்தும்.
-
உலகின் மிகச்சிறந்த மின் விநியோகம்:
நம் ஆட்சி அமைந்த 6 மாதங்களுக்குள் மின் விநியோகத்தில் உபயோகிக்கப்படும் பழுதான உபகரணங்கள் மற்றும் பொருட்கள் அனைத்தும் தமிழ்நாடு முழுவதும் மாற்றப்படும். இத்துடன் நம் ஆட்சி அமைந்த 7-ஆம் மாதத்திலிருந்து தமிழ்நாடு முழுவதும் மின்வெட்டு மற்றும் ஓல்டேஜில் சிறிதும் ஏற்றம் இறக்கம் அறவே இல்லாத மின் வினியோகம் வருடம் முழுவதும் சீராக அமெரிக்காவையும் விட மிக சிறப்பாக வழங்கப்படும்.
-
நம் ஆட்சி அமைந்த ஏழாவது மாதத் துவக்கத்திலிருந்தே தமிழ்நாட்டில் வாழும் அனைவருக்கும் சமுதாய அந்தஸ்து மதிப்பெண் கொடுக்கப்படும்:
தற்போது உலகில் எங்கும் சமுதாய அந்தஸ்து மதிப்பெண் முறையாக கணக்கிடப்படுவது இல்லை. நான் தான் உலகிலேயே முதன்முதலாக சமுதாய அந்தஸ்து மதிப்பெண் என்னும் ஒரு கருத்தைக் (Concept) கண்டுபிடித்துள்ளேன். ஒவ்வொரு மனிதரும் தங்களுக்கு சமுதாய அந்தஸ்து மதிப்பெண் என்றால் என்னவென்று தெரியாமலேயே தங்கள் மனதிற்குள் அவர்களுக்கு தெரிந்த அனைவருக்கும் அவர்களுக்கு சொந்தமாக இருக்கும் சொத்துக்கள் என தாங்கள் நினைப்பதன் அடிப்படையில் எந்த சரியான முறையையும் கடைபிடிக்காமல் அவர்களுக்கு தங்கள் மனதிற்குள்ளாலேயே ஒரு சமுதாய அந்தஸ்து மதிப்பெண்ணை நிலைநிறுத்துகிறார்கள். இந்த மதிப்பெண்ணின் அடிப்படையில் தான் ஒவ்வொரு மனிதரும் பிறரிடம் பழகும் போது அவருக்கு மதிப்பும் மரியாதையும் கொடுக்கின்றனர். சமுதாய அந்தஸ்து மதிப்பெண்ணை (1) கண்ணுக்கு புலப்படும் சொத்துக்களின் அடிப்படையிலான சமுதாய அந்தஸ்து மதிப்பெண் என்றும், (2) கண்ணுக்கு புலப்படாத சொத்துக்களின் அடிப்படையிலான சமுதாய அந்தஸ்து மதிப்பெண் என்றும் இரண்டு வகைகளாக பிரிக்கலாம். சமுதாய அந்தஸ்து மதிப்பெண் என்பது இந்த இரண்டு மதிப்பெண்களின் கூட்டுத்தொகை ஆகும். கண்ணுக்கு புலப்படும் சொத்துக்களின் அடிப்படையிலான சமுதாய அந்தஸ்து மதிப்பெண் என்பது ஒருவருக்கு சொந்தமான கண்ணுக்கு புலப்படக்கூடிய அவரின் சொத்துக்களின் அடிப்படையில் கணக்கிடப்படுவது. கண்ணுக்கு புலப்படும் சொத்துக்களுக்கு உதாரணம்: நிலம், கட்டிடம், பொன், வாகனம், கால்நடை முதலியவைகள். கண்ணுக்கு புலப்படாத சொத்துக்களின் அடிப்படையிலான சமுதாய அந்தஸ்து மதிப்பெண் என்பது ஒருவருக்கு சொந்தமான கண்ணுக்கு புலப்படாத அவரின் சொத்துக்களின் அடிப்படையில் கணக்கிடப்படுவது. கண்ணுக்கு புலப்படாத சொத்துக்களுக்கு உதாரணம்: சாதனை, கண்டுபிடிப்பு, படைப்பு, காப்புரிமை, சமுதாயத்திற்கு ஆற்றும் தியாகம், சமுதாயத்திற்கு அளிக்கும் பங்களிப்பு, அரசுக்கு கொடுக்கும் நன்கொடை, நன்னடத்தை, நேர்மை, கண்ணியம், ஆளுமை, மரியாதை, கௌரவம், புகழ், பெருமை, கீர்த்தி, கல்வி, மனோபாவம் போன்றவைகள்.
நிலம் போன்ற கண்ணுக்கு புலப்படும் சொத்துக்கள் இவ்வுலகில் ஒரு குறிப்பிட்ட அளவில் தான் உள்ளது. ஆதலால் நிறைய நபர்கள் நிலங்களை அதிக அளவில் சேர்க்க விரும்பினால், நிலங்களின் விலை அபரிமிதமாக அதிகரிப்பது மட்டுமல்லாமல் ஒருவருக்கொருவர் பகைமை, சண்டை, வழக்கு, பிரச்சனை போன்றவைகள் ஏற்பட்டு மனிதர்களுக்குள் விரோதம் வளர்ந்து சமுதாயத்தில் சமாதானம் கெட்டுவிடும். ஆகவே கண்ணுக்கு புலப்படும் சொத்துக்களை மனிதர்கள் அதிக அளவில் சம்பாதிப்பது நல்லதல்ல. ஆகவே நம் அரசு கண்ணுக்கு புலப்படும் சொத்துக்களை மக்கள் அதிகம் சம்பாதிப்பதை ஊக்கக்கெடுக்கும் அதாவது ஊக்குவிப்பதற்கு எதிராக செயல்படும்.
கண்ணுக்கு புலப்படாத சொத்துக்களை மனிதர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் அதிகரித்துக் கொள்ளலாம். அவைகள் அதிகரிக்க அதிகரிக்க நாட்டுக்கு நன்மைகள் அதிகரிக்கும். ஆகவே நம் அரசு கண்ணுக்கு புலப்படாத சொத்துக்களை அதிகரிப்பதற்கு எல்லா மக்களுக்கும் எல்லா வசதிகளையும் செய்து கொடுத்து ஊக்குவிக்கும். குற்றம் செய்தால் அந்த குற்றத்திற்கு ஏற்ப குற்றம் செய்தவருக்கு கண்ணுக்கு புலப்படாத சொத்துக்களின் அடிப்படையிலான சமுதாய அந்தஸ்து மதிப்பெண் மிக அதிகமாகக் குறையும்.
கண்ணுக்கு புலப்படாத சொத்துக்களின் அடிப்படையிலான சமுதாய அந்தஸ்து மதிப்பெண்ணை செயல்படுத்தும் திட்டம் தமிழ்நாட்டில் நம் ஆட்சி அமைந்த ஏழாவது மாத துவக்கத்திலிருந்து அமலுக்கு வரும். அமலுக்கு வந்த கணத்திலிருந்து ஒவ்வொரு தமிழ்நாட்டு குடிமக்களின் கண்ணுக்கு புலப்படாத சொத்துக்களின் அடிப்படையிலான சமுதாய அந்தஸ்து மதிப்பெண் தமிழ்நாட்டு அரசின் மையக் கணிணியில் அதாவது Taminadu Government’s Central Computer-ல் யார் வேண்டுமானாலும் தாங்கள் விரும்பும் நேரத்தில் இணையம் வழியாக பார்க்கும் படி பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும். இந்த மதிப்பெண் மாறியவுடனேயே தமிழ்நாட்டு அரசின் மையக்கணிணியில் புதிய மதிப்பெண் தானாகவே update ஆகிவிடும்.
தமிழ்நாட்டில் நம் ஆட்சியில் அரசும் பொது மக்களும் ஒவ்வொரு மனிதருக்கும் அவரின் கண்ணுக்கு புலப்படாத சொத்துக்களின் அடிப்படையிலான சமுதாய அந்தஸ்து மதிப்பெண்ணின் அடிப்படையில் தான் அவருக்கு மரியாதை கொடுக்க அரசு ஊக்குவிக்கும்.
இதற்காக ஒவ்வொரு நபரும் அவர் விருப்பப்பட்டால் அவரது உடையில் வெளியில் தெரியும்படி நெஞ்சுக்கு நேராக அவரது கண்ணுக்கு புலப்படாத சொத்துக்களின் அடிப்படையிலான சமுதாய அந்தஸ்து மதிப்பெண்ணும் அவரது பெயரும் உள்ள பெயர் தகடை பொருத்திக் கொள்ள அரசு ஊக்குவிக்கும். இந்த பெயர் தகடு இராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் விமான பைலட் அணியும் பெயர் தகடுகளை போல கம்பீரமாக இருக்கவும் அரசு விரும்பும்.
ஒருவரது கண்ணுக்கு புலப்படாத சொத்துக்களின் அடிப்படையிலான சமுதாய அந்தஸ்து மதிப்பெண் ஒரு ஐஏஎஸ் அதிகாரி அல்லது ஒரு ஐபிஎஸ் அதிகாரி அல்லது முதல் மந்திரியை விட அதிகமாக இருந்தால் அந்த நபருக்கு அனைத்து அரசு அலுவலகங்களிலும், பொது இடங்களிலும் அவரை விட கண்ணுக்கு புலப்படாத சொத்துக்களின் அடிப்படையிலான சமுதாய அந்தஸ்து மதிப்பெண் குறைவாக உள்ள ஐஏஎஸ் அதிகாரி அல்லது ஐபிஎஸ் அதிகாரி அல்லது முதல் மந்திரியை விட அதிக மரியாதை கொடுக்கப்படும்.
இவ்வாறு தமிழ்நாட்டில் கண்ணுக்கு புலப்படாத சொத்துக்களின் அடிப்படையிலான சமுதாய அந்தஸ்து மதிப்பெண் அதிகம் உள்ள நபர்களை அதிக கண்ணியமாகவும், அதிக மரியாதையாகவும் அரசும் மக்களும் நடத்தவுள்ளதால் எல்லா தமிழ்நாட்டு மக்களும் தங்களின் கண்ணுக்கு புலப்படாத சொத்துக்களின் அடிப்படையிலான சமுதாய அந்தஸ்து மதிப்பெண்களை உயர்த்துவதற்கு பாடுபடுவார்கள். இதனால் நம் தமிழ்நாட்டு மக்களின் சாதனைகள், கண்டுபிடிப்புகள், படைப்புகள், காப்புரிமைகள், சமுதாயத்திற்கு அவர்கள் ஆற்றும் தியாகங்கள், சமுதாயத்திற்கு அவர்கள் அளிக்கும் பங்களிப்புகள், அரசுக்கு அவர்கள் கொடுக்கும் நன்கொடைகள், அவர்களின் நன்னடத்தை, நேர்மை, கண்ணியம், ஆளுமை, மரியாதை, கௌரவம், புகழ், பெருமை, கீர்த்தி, கல்வி, மனோபாவம் முதலியவைகள் அதிகப்படும். இதனால் தமிழ்நாட்டிற்கு அதிக நோபல் பரிசுகளும் கிடைக்கும். தமிழ்நாட்டில் குற்றங்கள் குறையும். இதனால் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல மனித குலத்திற்கே நன்மைகள் பெருகும். தமிழ்நாடு மிகவும் விரைவில் முன்னேறும்.
சமுதாய அந்தஸ்து மதிப்பெண் என்னும் CONCEPT நம் நாட்டை முன்னேற்ற நான் அயராது 49 வருடங்கள் செய்த அற்பணிப்பான ஆழ்ந்த சிந்தனையில் மலர்ந்த பல முத்துக்களில் ஒரு முத்து. சமுதாய அந்தஸ்து மதிப்பெண் பற்றிய அதிக விவரங்களும் அவைகளை கணக்கிடும் முறையும் நான் வெளியிட உள்ள “சமுதாய அந்தஸ்து மதிப்பெண்” என்னும் புத்தகத்திலும் மற்றும் “விஞ்ஞான ஆட்சி” என்னும் புத்தகத்திலும் இருக்கும்,
-
ஊழல் நம் தமிழ் நாட்டின் முன்னேற்றத்தை கெடுக்கின்றது:
நம் தமிழ் நாட்டில் இயற்கை வளங்களும் மனித வளமும் நம் தேவைகளை விட மிக அதிக அளவில் உள்ளன. நமக்கு இருக்கும் இவ்வளங்களை சிறந்த முறையில் செயற்கை நுண்ணறிவையும் உபயோகித்து தமிழ்நாட்டை முன்னேற்றினால் நம் தமிழ் திருநாடு மூன்று வருடங்களுக்குள் உலகின் செழிப்பு மிக்க மாகாணமாக நிச்சயமாக ஒளிரும்.
1960-களில் சிங்கப்பூர் வருடத்திற்கு வெறும் 320 டாலர் தனி நபர் வருமானம் உடைய பின் தங்கிய நாடாக இருந்தது. 1990-களில் சிங்கப்பூர் உலகின் மிக செழிப்பான நாடுகளில் ஒன்றாக மாறியது. சென்ற ஆண்டின் சிங்கப்பூரின் தனிநபர் வருமானம் 65,422. 46 டாலர் ஆகும். இது 1959 இல் சிங்கப்பூரின் பிரதமராக பதவியேற்ற திரு லீ க்வான் யூ அவர்களால் ஊழலை இரும்புக்கரம் கொண்டு அடக்கி நல்லாட்சியை கொடுத்ததின் விளைவாக சாத்தியமானது.
வெறும் 734.3 சதுர கிலோ மீட்டர்களையும் சுமார் 50 லட்சம் 18 வயதிற்கு மேற்பட்ட மக்களையுமே மட்டும் கொண்ட சொல்லும் அளவிற்கு எந்த வளமும் இல்லாத சிங்கப்பூரால் உலகின் பொருளாதார குறியீட்டில் உலகின் மிக உயர்ந்த நிலையை அடையும் போது 1,30,058 சதுரகிலோமீட்டர்களையும் 7½ கோடி 18 வயதிற்கு மேற்பட்ட திறமையான மக்களையும் ஏறக்குறைய அனைத்து வளங்களையும் அபரிமிதமாக கொண்ட தமிழ்நாட்டால் உலகின் மிகவும் செழிப்பான தலைசிறந்த மாநிலமாக முன்னேறாததற்கு காரணம் ஊழலே ஆகும். நம் ஆட்சியில் தமிழ்நாடு மூன்று வருடங்களுக்குள் நிச்சயமாக சிங்கப்பூரை விட மட்டுமல்ல உலகிலேயே சிறந்ததாக மாறிவிடும்.
- அ. சாலைகள் உலகின் தலை சிறந்தவைகளாக மேம்படுத்தப்படும்:
ஒரு நாடு முன்னேற அந்த நாட்டின் சாலைகள் மிக முக்கியம். சுமார் 87 விழுக்காடு மனிதப் போக்குவரத்தும், சுமார் 60 விழுக்காடு சரக்கு போக்குவரத்தும் நம் இந்திய நாட்டில் சாலைகள் மூலமாக தான் நடைபெறுகின்றது. தமிழ்நாட்டை பொருத்தவரை இவைகளின் புள்ளி விவரங்கள் சரியாக கிடைக்கவில்லை. ஆனால் தமிழ்நாட்டில் சாலை போக்குவரத்து இதை விட அதிக சதவிகிதத்தில் இருப்பதாக கூறப்படுகின்றது. நல்ல தரமான சாலைகள் இருந்தால் தான் தமிழ்நாடு மிக வேகமாக முன்னேறும்.
துரதிஷ்டவசமாக தமிழ்நாட்டின் சாலைகள் உலகத்தரத்தோடு ஒப்பிட்டு பார்க்கையில் மிகவும் தரமற்றவைகளாக உள்ளன. தமிழ்நாட்டில் 2023-ஆம் ஆண்டு 18,347 மனிதர்களும், 2022-ஆம் ஆண்டு 17,884 மனிதர்களும் சாலை விபத்தில் இறந்துள்ளனர். 2023-ஆம் ஆண்டு 67,213 சாலை விபத்துகளும், 2022-ஆம் அண்டு 64,105 சாலை விபத்துகளும் தமிழ்நாட்டில் நிகழ்ந்துள்ளன. ஆகவே நம் ஆட்சி அமைந்த ஆறு மாதங்களுக்குள் தமிழ்நாட்டில் ஏற்கனவே உள்ள அனைத்து சாலைகளும் உலக தரத்தில் பாதுகாப்பான சாலைகளாக மாற்றப்படும். தமிழ்நாட்டில் புதிய சாலைகள் தேவையான எண்ணிக்கைகளில் பாதுகாப்பு உட்பட அனைத்திலும் உலகின் தலைசிறந்த தரத்தில் நம் ஆட்சி அமைந்த பதினெட்டு 18 மாதங்களுக்குள் அமைத்து முடித்து பயன்பாட்டிற்கு வரும்.
ஆ. மரங்களை வெட்ட புதிய நிபந்தனைகள் விதிக்கப்படும்:
நம் ஆட்சியில் மரங்களை வெட்ட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படின் மரங்களை வெட்ட அனுமதி அளிக்க நம் அரசு ஒரு புது முறையை அறிமுகப்படுத்த உள்ளது. அதன் படி ஒரு மரம் வெட்ட அனுமதி அரசிடமிருந்து கிடைக்க வேண்டுமென்றால் அந்த மரத்தினால் உறிஞ்சப்படும் கார்பன்-டை-ஆக்ஸைடை விட 4 மடங்கு அதிகம் கார்பன்-டை-ஆக்ஸைடை ஏழு வருடங்களுக்குள் உறிஞ்சும் மரங்களை, மரங்களை வெட்ட அனுமதி கேட்பவர்கள் தாங்களாகவொ தங்கள் சார்பிலோ, 6 மாதங்களுக்குள் நடுவோம் என்றும், நடும் தேதியிலிருந்து 15 வருடங்களுக்கு அந்த மரங்களை வெட்ட மாட்டோம் எனவும் அரசுக்கு வாக்குறுதி அளிக்க வேண்டும். இந்த வாக்குறுதியை அரசுக்கு கொடுப்பதற்கு மரத்தை வெட்ட அரசிடம் அனுமதி கேட்பவர் அந்த மரங்களை வளர்ப்பவர்களுக்கு பணம் கொடுத்து அரசுக்கு மேற்கண்ட வாக்குறுதிய அளிக்க வேறு ஆளிடம் பிணைப்பு ஒப்பந்தம் (TIE UP AGREEMENT) செய்தாலும் தவறு இல்லை. இவ்வாறு அரசுக்கு வாக்குறுதி கொடுக்க பிணைப்பு ஒப்பந்தத்திற்கு பணம் கிடைப்பதால் நிறைய பேர் புதிதாக 15 வருடங்கள் மரங்களை வளர்ப்பதை ஒரு வணிகம்/தொழிலாக செய்வார்கள். இதனால் தமிழ்நாட்டில் நிறைய புதிய மரங்கள் வளர்க்கப்படும். இதனால் வளிமண்டலத்திலுள்ள கார்பன்-டை-ஆக்ஸைடு மரங்களால் உறிஞ்சப்படும்.
இ. மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களுக்கு மட்டும் தான் அனுமதி:
நம் ஆட்சி அமைந்த மூன்று வருடங்களுக்குள் புதைப்படிவ எரிபொருள்களான பெட்ரோல் மற்றும் டீசலால் இயக்கப்படும் அனைத்து வாகனங்களும் தமிழ்நாட்டில் முற்றிலுமாக தடை செய்யப்பட்டு, மின் சக்தி அல்லது மாசு ஏற்படாத சக்தியால் மட்டும் இயங்கும் வாகனங்கள் மட்டும்தான் தமிழ்நாட்டில் இயக்க அனுமதி இருக்கும்.
-
ஓய்வூதிய திட்டம்:
நான் 49 வருடங்களாக அர்ப்பணிப்புடன் ஆழ்ந்து அயராது சிந்தித்து ஆராய்ச்சி செய்து விஞ்ஞான முறைப்படி கணித்ததன் பலனாக என் ஆட்சி காலத்தில் தமிழ்நாட்டு அரசுக்கு தேவையை விட அதிக பணம் வந்துக்கொண்டே இருக்கும். இதனால் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு சம்பளமும், ஓய்வூதியமும் வாரி வழங்குவதில் எந்த சிரமும் இருக்காது. நம் ஆட்சியில் கொடுக்கவிருக்கும் ஓய்வூதியத்தின் சுருக்கம் ஏற்கனவே இக்கட்டுரையில் 23-வது வாக்குறுதியாகக் கொடுக்கப்பட்டுள்ளது. தயவுசெய்து அதைப் பார்க்கவும்.
- உலகின் தலைசிறந்த அரசு மையக்கணிணி மற்றும் அரசு இணையதளம்:
நம் ஆட்சி அமைந்த 7-வது மாதத் துவக்கத்திலிருந்தே தமிழ்நாடு அரசின் மையக் கணிணி (Central Computer) என்னும் சூப்பர் கம்ப்யூட்டரும் மற்றும் தமிழ்நாடு அரசின் இணையதள சேவையும் அதாவது Website Service-ம் உலகின் தலை சிறந்ததாக இருக்கும். இவைகள் எக்காரணத்தாலும் ஒரு நொடி கூட பழுதாகவோ அல்லது செயல்படாமலோ இருக்காது. இத்துடன் இவைகளின் வேகமும் உலகிலேயே தலைசிறந்ததாக இருக்கும்.
தமிழ்நாட்டில் வசிக்கும் அனைவரின் அனைத்து விவரங்களும், சான்றிதழ்களும் அரசின் மையக்கணிணியில் இருக்கும். அவைகளில் சில: அவர்களின் பிறந்த தேதி, கல்யாண தேதி, கல்வி சான்றிதழ்கள், பாஸ்போர்ட் இருப்பின் அதன் விவரங்கள், வங்கியில் உள்ள பணம், சொத்துக்களின் முழுவிவரங்கள், அவர்கள் பெற்ற பரிசுகள், பதக்கங்கள் அவர்களின் கண்ணுக்கு புலப்படாத சொத்துக்களின் அடிப்படையிலான சமுதாய அந்தஸ்து எண், அவர்கள் நாட்டுக்கு செய்த நன்மைகள், அவர்களின் குற்ற பின்னணி, அவர்கள் சிறை தண்டனை பெற்றிருந்தால் அதன் விவரங்கள், அவர்கள் கட்டிய அபராதங்கள், அவர்கள் பணியிடை நீக்கம் மற்றும் பணி நீக்கம் செய்யப்பட்டிருந்தால் அவைகளின் விவரங்கள், வெளிநாடு சென்றிருந்தால் அவற்றின் விவரங்கள், அவர்களின் நோய்கள் மற்றும் அதற்கான சிகிச்சைகளின் முழுவிவரங்கள், அவர்கள் தமிழ்நாடு அரசிடம் பெற்ற சலுகைகள், கடன்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள், பிறந்த தேதிகள், உறவின் விவரங்கள் போன்றவை. இவை அனைத்தும் நம் ஆட்சி அமைந்த ஆறாவது மாதம் முடிவதற்குள் நம் அரசின் மையக்கணிணியில் பதிவேற்றம் செய்து முடிக்கப்படும்.
இந்த விவரங்களை அந்த தரவுகளுக்குரிய நபர்களைத் தவிர வேறு யாரும் அரசு மையக்கணிணியிலிருந்து தெரிந்துக்கொள்ள முடியாது. நேர்காணல் போன்றவற்றில் சம்பந்தபட்ட நபர் விருப்பப்பட்டால் அவர் காண்பிக்க விரும்பும் சான்றிதழ்களையும், விவரங்களையும் இந்த மையக்கணிணியில் இருந்து இணையம் வழியாக அந்த நபர் தன் உயிரியளவியல் அடையாளங்கள் (Biometric Identification) மூலமாக கணிணி அல்லது கைப்பேசியில் காண்பிப்பது மற்றும் print out எடுப்பது போன்றவற்றை செய்யலாம். இதில் யாரையும் ஏமாற்ற முடியாது ஏனெனில் இவைகள் தமிழ்நாடு அரசின் மையக்கணிணியில் இருந்து நேரடியாக வருவது. தேவையானவர் தன் மெட்ரிக் அடையாளம் மூலமாக அரசின் மையக்கணிணியில் இருந்து தன் விவரங்களை மட்டும் தான் பார்க்கவும், print out எடுக்கவும் முடியும் என்பதால் தன்னை தவிர வேறுயாரும் திருட்டுத்தனமாக அவைகளை பார்க்கவோ, print out எடுக்கவோ முடியாது. இதனால் போலி சான்றிதழ்கள் மூலம் ஏமாற்றுவது தடுக்கப்படுவதுடன் சான்றிதழ்களை யாரும் பத்திரமாக வைத்திருக்க வேண்டிய கஷ்டமும், நேர்காணல்களுக்கு அவைகளை கையில் பத்திரமாக எடுத்து செல்லவேண்டிய கஷ்டமும் இல்லாமல் போய்விடும். இத்திட்டம் நம் ஆட்சி அமைந்த ஏழாம் மாதத் துவக்கத்திலிருந்து நடைமுறைக்கு வரும். தற்போது நடைமுறையிலுள்ள பேப்பர் சான்றிதழ்களை பயன்படுத்தும் முறை இத்திட்டம் செயல்படத் துவங்கியவுடன் நிறுத்தப்படும்.
அரசு மையக்கணிணியில் பதிவு செய்யபட்ட எந்தவொரு விவரத்தையும் யாராலும் மாற்றவோ அகற்றவோ முடியாது. போலீஸ் உட்பட புலனாய்வு நிறுவனங்களுக்கு கூட ஒருவருடைய விவரங்களில் தங்களின் புலனாய்வுக்கு தேவையான அரசு வரையறுத்த சில விவரங்களை மட்டும் தான் தங்களின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆஃப் போலீஸின் ஒப்புதலைப் பெற்று அந்த விவரங்களுக்கு சொந்தமான நபருக்கு தெரியாமலும், அவரது அனுமதி இல்லாமலும் பார்க்க முடியும். நீதிமன்றங்கள் தங்களுக்கு தேவையான அனைத்து விவரங்களையும் பார்க்கலாம். அரசின் மையக்கணிணியில் இருக்கும் ஒருவரின் விவரங்களை மற்றவர்கள் பார்க்க முடியாது.
இந்த மையக்கணிணியில் ஒவ்வொரு தமிழ்நாட்டு குடிமக்களின் ஆரோக்கியம், மற்றும் வியாதிகள் சம்பந்தமான அனைத்து விவரங்களும் இருக்கும். இதனால் மருத்துவரிடம் ஆலோசனைப் பெற நோயாளிகள் தங்களது மருத்துவப் பதிவுகளை (MEDICAL RECORDS) எடுத்து செல்ல வேண்டிய தேவையில்லை. தங்களது உயிரியளவியல் அடையாளங்கள் மூலம் இணையம் மூலமாக அரசின் மையக் கணிணியில் இருக்கும் தங்களது மருத்துவ தரவுகளை மருத்துவருக்கு காண்பிக்கவோ பிரின்ட் அவுட் எடுத்து கொடுக்கவோ முடியும். இதே போல் தான் தங்களது படிப்பு, சொத்து போன்ற அனைத்து ஆவணங்களையும் மையக் கணிணியிலிருந்து காண்பிக்கவோ பிரின்ட் அவுட் எடுக்கவோ செய்யலாம். நம் ஆட்சி அமைந்த 7-வது மாதத்திலிருந்து தமிழ்நாடு அரசின் செயல் திறன் உலகம் வியக்கும் அளவிற்கு உலகிலேயே தலைசிறந்ததாக மேம்படும்.
- பொது மக்களிடமிருந்து ஆலோசனைகள் வரவேற்கப்படும் :
நல்ல ஆலோசனைகள் நல்ல ஆட்சிக்கு மிகவும் இன்றிமையாததால் நம் ஆட்சி அமைந்த 7-ஆம் நாள் முதல் அரசுக்கு ஆலோசனைகள் பெற இணையதளம் செயல்படும். நல்ல ஆலோசனைகளை உலகிலுள்ள யார் கொடுத்தாலும் நமது அரசு அவைகளை ஆராய்ந்து உடனடியாக நடைமுறைப்படுத்தும். மக்கள் வழங்கும் கருத்துக்களை ஆராய திறமையுள்ள நபர்களை அதிக சம்பளம் கொடுத்து தேவையான எண்ணிக்கைகளில் அரசு வேலைக்கு அமர்த்தும். இதனால் மக்கள் கொடுக்கும் அனைத்து கருத்துக்களும் தாமதம் இல்லாமல் உடனடியாக ஆராயப்படும். ஆலோசனைகள் வழங்குபவர்களை ஆலோசனைகளை ஆராயும் அதிகாரிகள் நேரடியாகவோ வீடியோ அல்லது தொலைப்பேசி மூலமாகவோ கலந்து ஆலோசித்து, அதன்பின் அவர்கள் வழங்கிய ஆலோசனைகள் நல்ல ஆலோசனைகளாக இருப்பின் அந்த ஆலோசனைகளுடன் வேறு ஏதாவது சேர்க்க வேண்டுமாயின் சேர்த்தோ அல்லது தேவையான மாறுதல்கள் செய்தோ, அந்த ஆலோசனைகளை மிக விரைவில் அமல்படுத்தி நாடு முன்னேற வழிவகை செய்யப்படும். அரசுக்கு வரும் ஆலோசனைகள், நடைமுறைப்படுத்தப்பட்டால் அந்த ஆலோசனைகளை வழங்கியவர்களுக்கு அந்த ஆலோசனைகளின் முக்கியத்துவம், அவைகளால் நாட்டிற்கு ஏற்படும் நன்மைகளின் அடிப்படையில் அவர்களுக்கு கணிசமான பணம் உடனடியாகவும், மாதந்தோறும் ராயல்டியாகவும் வழங்குவதுடன் அவர்களது கண்ணுக்கு புலப்படாத சொத்துக்களின் அடிப்படையிலான சமுதாய அந்தஸ்து எண்ணும் உயரும். இத்துடன் அவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்படும். அந்த ஆலோசனை வழங்குபவர்கள் விவரங்களையும், அந்த ஆலோசனைகளையும் அதனால் நாட்டிற்கு வரும் நன்மைகளையும், அரசு இணையதளத்தில் வெளியிடப்பட்டு அவர்களுக்கு பெருமையை அரசு உருவாக்கும். இவ்வாறு செய்வதால் உலகம் முழுவதும் உள்ள நிறைய மக்கள் நம் தமிழ்நாட்டிற்கு சிறந்த ஆலோசனைகள் நிறைய வழங்குவார்கள். இந்த ஆலோசனைகளை உபயோகப்படுத்தி தமிழ்நாடு மிக விரைவில் முன்னேறும்.
- கட்சத்தீவு இந்தியாவுடன் மீண்டும் இணைக்கப்படும்:
கட்சத்தீவு 1974-ஆம் ஆண்டு வரை இந்தியாவுக்கு சொந்தமானதாகவும், இந்தியாவின் கைவசமும் தான் இருந்தது. 1974-ஆம் ஆண்டு சட்டப்படி செல்லுபடி ஆகாத ஒரு ஒப்பந்தம் மூலமாக கட்சத்தீவை இலங்கை சொந்தம் கொண்டாடுவதுடன் தலைமுறை தலைமுறையாக அங்கு மீன் பிடிக்கும் இந்திய மீனவர்களது படகுகளை இலங்கை பிடிப்பது மட்டுமல்லாமல், இந்திய மீனவர்களை கைதும் செய்து சிறைகளிலும் அடைத்து அநீதி இழைக்கின்றது. ஆகவே நம் ஆட்சியில் நாம் சட்டப்படி போராடி கட்சத்தீவை திரும்பவும் மீட்டெடுத்து நம் மீனவர்களை காப்போம்.
- ஸ்மார்ட் சிட்டி:
ஸ்மார்ட் சிட்டி என்பதற்குத் தமிழில் சீர்மிகு நகரம் அல்லது புத்திசாலி நகரம் என்று பொருள். இது தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி, நகரச் செயல்பாடுகளைத் திறமையாகவும் நிலையானதாகவும் மாற்றும் ஒரு நகர்ப்புறப் பகுதியாகும். ஸ்மார்ட் சிட்டி என்பது தகவல் தொழில்நுட்பம் (IT), டிஜிட்டல் வசதிகள், தரவு (Data) ஆகியவற்றைப் பயன்படுத்தி நகர வாழ்வை எளிதாகவும், பாதுகாப்பாகவும், சுற்றுச்சூழலுக்கு நட்பாகவும் மாற்றும் நகரத் திட்டமாகும். ஸ்மார்ட் போக்குவரத்து, சிக்னல் கட்டுப்பாடு (Smart Traffic Signals), GPS மூலம் பேருந்து கண்காணிப்பு, மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள், ஸ்மார்ட் குடிநீர் மேலாண்மை, தண்ணீர் வீணாகாமல் கண்காணிப்பு, ஸ்மார்ட் மீட்டர்கள், மழைநீர் சேகரிப்பு, ஸ்மார்ட் மின்சாரம், சோலார் சக்தி பயன்பாடு, மின்சார சேமிப்பு, தானியங்கி தெருவிளக்குகள், ஸ்மார்ட் குப்பை மேலாண்மை, சென்சார் கொண்ட குப்பை தொட்டிகள், நேரத்திற்கு ஏற்ற குப்பை சேகரிப்பு, மறுசுழற்சி (Recycling), ஸ்மார்ட் பாதுகாப்பு, CCTV கண்காணிப்பு, அவசர உதவி எண்கள் (Command Control Center), பெண்கள் & குழந்தைகள் பாதுகாப்பு, ஸ்மார்ட் நிர்வாகம், ஆன்லைன் சேவைகள் (பில் கட்டணம், சான்றிதழ்கள்), e-Governance, பொதுமக்கள் புகார் செயலிகள் (Apps), ஸ்மார்ட் கல்வி & சுகாதாரம், டிஜிட்டல் வகுப்பறைகள், லைமருத்துவ சேவைகள் (Tele Medicine), ஸ்மார்ட் மருத்துவமனைகள், போன்றவைகள் இதில் அடங்கும். இதன் நோக்கங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்துதல், நேரம் மற்றும் செலவினத்தை குறைத்தல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி, வெளிப்படையான நிர்வாகம் முதலயன.
- நம் ஆட்சியில் அனைவருக்கும் அனைத்திலும் முழு பாதுகாப்பு:
நம் ஆட்சி அமைந்த 7-வது மாதத்திலிருந்து தமிழகத்தில் வாழும் அனைவருக்கும் எல்லா விதமான பாதுகாப்புகளும் 100 சதவீதம் முழுமையாக கிடைக்கும்; இதை விரிவாகச் சொன்னால் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு அதாவது தங்களது உடம்புக்கும் பாதுகாப்பு, சொத்துக்களுக்கும் பாதுகாப்பு மற்றும் பொய் புகார்களில் இருந்து பாதுகாப்பு உட்பட அனைத்து பாதுகாப்புகளும் முழுமையாக கிடைக்கும். பெண்கள் தனியாக கூட தங்க நகைகள் அணிந்து கொண்டு நள்ளிரவிலும் தெருக்களில் தைரியமாக எந்த பயமுமில்லாமல் நடமாட முடியும். மேலும் விரிவாகச் சொன்னால் எந்தவொரு நபரையும் யாரும் தாக்காமலும், கற்பழிக்காமலும், மிரட்டாமலும், யாருடைய உடமைகளையும் திருடாமலும், பலவந்தமாக பறிக்காமலும், பொய் புகார் அளிக்காமலும் நம் ஆட்சியில் எல்லாம் நேர்மையாக மட்டும் தான் நடைபெறும். நம் ஆட்சியில் போலீஸ் மிகவும் நேர்மையாகவும், கண்ணியமாகவும், திறமையாகவும், உலகின் தலை சிறந்த போலீஸாகவும் நிச்சயமாக செயல்படுவார்கள். இதனால் நம் ஆட்சியில் குடிமக்கள் தங்கள் பாதுகாப்பைப் பற்றியும் அமைதியைப் பற்றியும் சிறு துளி கூட கவலையில்லாமல் தங்கள் வேலைகளை முழுத் திறமையுடன் செய்ய முடியும்.
- தமிழ்நாடு 2028 ஒலிம்பிக்கில் அதிக பதக்கங்களை வெல்லும்:
தமிழ்நாட்டில் நம் ஆட்சி அமைந்த பின் துவங்கும் முதல் கல்வி ஆண்டிலிருந்து எல்லா பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும் சிறந்த உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுக்கள் அளிக்கப்படும். ஒவ்வொரு மாணவரையும் அவருக்கு எந்த விளையாட்டு சிறந்தது என தனித்தனியாக விஞ்ஞான முறைப்படி வல்லுனர்களால் சோதனை செய்யப்பட்டு அவரின் உடம்பு மற்றும் விருப்பத்திற்கு சிறந்த விளையாட்டில் உலகின் மிகச்சிறந்த பயிற்சி அளிக்கப்படும். இதற்கு தேவையான விளையாட்டு மைதானங்கள், கருவிகள், மற்றும் விளையாட்டு சாதனங்கள் ஆகியவற்றை எந்தத் தட்டுப்பாடும் இல்லாமல் தேவைகளுக்கு ஏற்ப அரசு அளிக்கும். இத்துடன் நம் மாணாக்கர்கள் ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கு தேவையான போஷாக்கான உணவு, அவர்கள் பயிற்சி செய்யும் விளையாட்டுக்கு ஏற்றார் போல் சரியான அளவில் சரியான நேரத்தில் உணவியல் நிபுணர்களின் ஆலோசனைப்படி உலகிலேயே மிகவும் சிறந்தவைகளாக அரசால் அளிக்கப்படும். இப்பயிற்சிகளில் சிறந்து விளங்கும் மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு உலகின் தலைசிறந்த தங்கும் வசதியுடன் கூடிய உலகின் தலைசிறந்த பயிற்சிகள் விஞ்ஞான முறைப்படி கொடுக்கப்பட்டு தமிழ்நாட்டிற்கு அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சலிஸ் நகரத்தில் 2028 ஆம் ஆண்டு ஜூலை 14ஆம் தேதி துவங்க உள்ள கோடை ஒலிம்பிக்கிலும், அதற்குப் பின் வரும் ஒலிம்பிக் போட்டிகள் அனைத்திலும் தமிழ்நாடு அதிக அளவில் ஒலிம்பிக் பதக்கங்களை நிச்சயமாக பெறும்.
இங்கு குறிப்பிட்டுள்ள கால வரம்புகளுக்குள் நான் கூறும் அனைத்து மாபெரும் சாதனைகளையும் அதாவது வாக்குறுதிகளையும் நிச்சயமாக சாதிக்க முடியும் என நான் ஆணித்தரமாக கூறுகின்றேன். என்னை உங்களின் உடன் பிறந்த நல்ல சகோதரனாக ஏற்றுக்கொண்டு என்னை நம்புங்கள். என்னால் சாதிக்க முடியாதவைகளை சாதிக்க முடியும் என்று சொல்லி நான் யாரையும் ஏமாற்றுபவன் அல்ல. இது சத்தியத்திலும் சத்தியம்.
நடைபெற இருக்கும் தமிழ்நாட்டு தேர்தலுக்கு கூட்டணி பேசும் முறையில் இருந்து தேசிய கட்சிகள் உட்பட அனைத்து கட்சிகளும் எந்த கொள்கையும் இல்லாமல் தேர்தலுக்கு கூட்டணியில் தங்களுக்கு அதிக இடங்கள் கிடைப்பதை மட்டுமே கொள்கையாக வைத்து கூட்டணி சேருகின்றன என நன்றாக புரிகின்றது. ஆனால் நம் நாட்டு சுதந்திரப் போராட்டத் தியாகிகள் நாடு சுதந்திரம் பெற்றால் நல்லாட்சி நடைபெற்று நம் நாடு உலகிலேயே சிறந்த வல்லரசாகி விடும் என்ற கனவினால் மட்டும் தான் தங்கள் சொத்துக்களையும், சுகங்களையும் துறந்து செக்கிழுத்தது போன்ற சித்ரவதைகளை அனுபவித்து சுதந்திரத்தைப் பெற்று கொடுத்தார்கள். ஆனால் சுதந்திர இந்தியாவில் தமிழகத்தில் தற்பொது செயல்படும் அனைத்து அரசியல் கட்சிகளும் நாட்டைக் கொள்ளையடிக்கும் பகல் கொள்ளையர்களாக மாறிவிட்டது மட்டுமல்லாமல், நாட்டு மக்களை குற்றங்களை குற்றங்கள் இல்லையென நினைத்து குற்றங்கள் செய்தால் மட்டும் தான் சாதாரண வாழ்க்கையைக் கூட நடத்த முடியும் என்னும் நிலைக்கு தள்ளிவிட்டார்கள். தமிழ்நாட்டை 31-03-2030-க்கு முன் உலகிலேயே மிகவும் செழிப்பான மற்றும் குடிமக்கள் அனைவரும் முழு மனநிறைவோடும் மகிழ்ச்சியோடும் வாழும் சிறந்த மாநிலமாக, என் உடல் பொருள் ஆவி அனைத்தையும் கொடுத்து, ஒளிர வைக்க சிறந்த திட்டங்களுடன் நான் தயாராக காத்திருக்கின்றேன். நான் என்னை உங்களுக்கு அர்ப்பணிக்கின்றேன். இது சத்தியம். ஆகவே நம் தமிழ்நாடு உலகிலேயே தலைசிறந்த மாநிலமாக முன்னேறவும், தமிழ்நாட்டு குடிமக்களும் அவர்களின் சந்ததிகளும் எந்தவிதமான கஷ்டமோ கவலையோ இன்றி மிகவும் சந்தோஷமாகவும், செழிப்பாகவும் வாழ நாம் அனைவரும் ஒன்றாக சேர்ந்து தமிழ்நாட்டை முன்னேற்ற தமிழ்நாட்டில் நம் ஆட்சி அமைய ஒத்துழைக்கும்படி மிகவும் பணிவுடனும் அன்புடனும் வேண்டிக்கொள்கிறேன். என்னை நம்புங்கள். நான் ஏமாத்தமாட்டேன். எனக்கு ஒரு தடவை வாய்ப்பளித்து பாருங்கள். நான் தமிழ்நாட்டை நான்கு வருடங்களுக்குள் சொர்க்க பூமியாக மாற்றி காட்டுகிறேன். இது சத்தியத்துடன் கூடிய என் சவால்.